பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி 다o 229

நாயன்மார்க்குப் பிற்பட்ட சோழர் காலத்தில் வழிபாட்டு முறைகளும் பிறவும் நன்கு வளர்ந்தன. அவ்வளர்ச்சியை ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களிற் காணலாம். பெரியபுராண வரலாறு பல்லவர் காலத்ததாயினும் நூலைப் பாடியவரான சேக்கிழார் சோழர் காலத்தவராதலால், அவர் செய்யுட்களில் சோழர் காலச் சமய நிலையையும் வழிபாட்டு முறைகளையும் அறிய இடமுண்டு. அவரே சிறந்த சைவசமயப் புலவராதலின், அவர் பாக்களில் சிவப் பொலிவினைக் காணலாம். அப்பக்திமானது காலத்தவனான"அநபாய சோழன் பொன்னம்பலத்துக் கூத்தப் பெருமானுடைய பாதங்களாகிய தாமரை மலர்களில் உள்ள தேனைப் பருகும் தேனிப் போன்றவன்,' என்று கல்வெட்டுக் கூறுவதிலிருந்து,' அவனது சிவ வழிபாட்டையும் பக்தியையும் நன்கறியலாம். -

சைவர் நம்பிக்கைகள்: முன்வினை இப்பிறவியிற் பலிக்கும்;" இறைவன் அடியவர் அன்பினை அளக்கச் சோதனைகள் நிகழ்த்துவான்." இறைவன் வேதங்கட்கும் உரியவன்; தமிழ் நூல்கட்கும் உரியவன். ("ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்')" அடியார்க்குக் கோளும் நாளும் தீயவும் நல்லவாம்:" அடியார்கள் பிழைகளை இறைவன் மன்னிப்பான்; அடியார்க்கு எளியனாய் வந்து உதவுவன்,' என்பன அக்காலச் சைவ மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளிற் சிலவாகும்.