பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி བ་ལ་དབྱུs 23

4. முருக விழா - முருகன் கோயில்களில் கொண்டாடப்பட்ட பெரு விழா.' -

5. மதுரைக் கோயிலில், விழாத் தொடங்கிய ஏழாம் நாள் அந்தியில், மக்கள்தீர்த்தமாடல் மரபு.தெய்வவுருவங்கள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. அத் தெய்வங்கட்குரிய கொடிகள் எடுத்துவரப்பட்டன. மதுரையில் ஒவ்வொரு கோயிலிலும் விழாக் கொண்டாடப்பட்டது."

இவையன்றிப் பல விழாக்கள் பண்டை நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நோக்க, கோயில்களில் விழாக்கள் நடைபெற்றன; திருமேனிகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன என்பன நன்கறியலாம். இந்திரவிழா காவிரிப்பூம் பட்டினத்தில் 21-நாள் சிறப்பாக நடைபெற்றது; எல்லாக் கோயில்களிலும் பூசைகள் நடந்தன, ஆடல்-பாடல்கள் நிகழ்ந்தன. பல சமயப் பெரியார்கள் தங்கள் மடங்களில் அறிவுரை வழங்கினர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. -

திருநீறு --

சிவபிரான் முப்புரத்தை எரித்த சாம்பலை அணிந்து ஆடியவன் என்ற கலித்தொகைக் குறிப்பினால்' பாண்டரங்கக்கூத்தாடுகையில் சிவன் திருநீறு அணிபவன் என்பதை அக்கால மக்கள் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது." மதுரையில் யானை ஒன்று நீறணிந்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது." - ஐம்படைத்தாலியும் இடப அணியும்

பழந்தமிழ்ப் பிள்ளைகள் காத்தற் கடவுள்ன திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐந்தின் வடிவமாக அமைத்து அணியும் அணி ஐம்படைத் தாலி எனப்பட்டது." இது போலவே சிவபிரானுடைய மழு, வாள், எருது இவற்றைப் போலப் பொன்னாற் செய்து மக்கள் அணிந்திருந்தனர்.' - -

பிரார்த்தனை

மக்கள் கோயில்களில் வலம் வந்தனர்.'பிரார்த்தனை புரிந்தனர். அவர்கள் பிரார்த்தனை விவரங்கள் முன்னரே கூறப்பட்டுள்ளன. கடவுளிடம் வரம் வேண்டிப் பக்தர்கள் கோயிலில் உண்ணாதிருத்தலும் உண்டு." ኣ