பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி = 25

நிலைத்திருந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்." காவிரிப்பூம் பட்டினம், காஞ்சி, வஞ்சி, மதுரை என்ற பெரிய நகரங்களில் சமணர் பள்ளிகள் இருந்தன என்பதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக் காஞ்சி இவற்றால் அறியலாம். சமண முனிவர் புலால் தின்னாதவர்; பொய் கூறாதவர்; அழுக்காறு, அவா முதலியன இல்லாதவர், அறநூல் முதலியவற்றை அறிந்தவர், ஐம்புலன்களை அடக்கியவர். அவர்கள் கோயில் ரீ கோயில், நிக்கந்தக் கோட்டம் எனப்பட்டது. அங்கு நல்ல நாட்களில் அசோக மரத்தடியில் சமண இல்லறத்தார் கட்டிவைத்த மேடை மீது ஆகாய சாரிகள் வந்து தங்குவர்." எறும்புக்கும் தீங்குசெய்யலாகாது என்பது சமணர் கொள்கை. சமணர் கடவுள் அருகதேவன்.'"சமணத் துறவியரும் ஆசிரியரும் தங்கியிருந்த இடம் சமணப்பள்ளி எனப்பட்டது. அப் பள்ளியில் சித்திரங்கள் தீட்டப் பட்டிருந்தன." சமணத் துறவிமார் உண்ணாமையால் SuTAL வயிற்றினர்; நீராடாத மேனியர்; உறியிலே வைத்த குண்டிகை உடையவர்; நுட்பமாகத் திரண்ட பிரம்பை உடையவர்:' எறும்பு முதலிய நுண்ணிய உயிர்கள் இறந்துவிடுமோ என்று அஞ்சி மயிற் பீலியால் வழியைத் தூய்மை செய்து நடப்பவர் உடம்பில் ஆடையே இல்லாதவர் மலைக் குகைகளிலும் நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளிலும் தவம் செய்பவர்;" ஸ்ராவகர் என்பவர் இல்லறத்தில் உள்ள சமணர், அங்கங்குச் சென்று அறம் உபதேசிக்கும் சாரணர், ஸ்ராவகர்க்கு அறம் உபதேசித்தலும் உண்டு." கோவலன் ஸ்ராவகநோன்பி, 'அடிகள் என்றும் கூறப்பட்டான்." ஸ்ராவகர். அறவோர்க்களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க்கு எதிர்தல் ஆகிய மூன்றும் செய்யக் கடமைப்பட்டவர்.' சமணருள் பெண் துறவியரும் இருந்தனர். கவுந்தியடிகளே இதற்குச்சான்றாவார். பெண்துறவிகளும் 'அடிகள் எனப்பட்டனர். சமண முனிவர்கள் சிறந்த கல்விமான்கள். அவர்கள் தங்கள் சமயத்தைத் தமிழகத்திற் பரப்பி வந்தனர். நிக்கந்தர் என்பதும் திகம்பரர் என்பதும் ஒரே பொருளையுட்ையன." மணிமேகலையில் நிக்கந்தவாதமே கூறப்பட்டிருத்தலின், தமிழகத்தில் பல்லவர்க்கு முன் திகம்பர சமணமே இருந்தது என்பது தெளிவு."

பெளத்த சமயம்

பெளத்த சமயம் ஏறத்தாழ அசோகன் காலத்தில் தென்னாட்டிற் புகுந்தது என்பதை அவனுடைய சிறிய பாறைக்கல்வெட்டுகள்(Minor Rock Ediets) வெளிப்படுத்துகின்றன. காவிரிப்பூம் பட்டினம், வஞ்சி, காஞ்சி, மதுரை என்ற பெரிய நகரங்களில் பெளத்த விகாரங்களும் பள்ளிகளும் இருந்தன என்பது, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய