பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி = 27

தமிழகத்திற் பல இடங்களில் பரவி வாழ்ந்தனர். அவர்தம் பழக்க வழக்கங்கள், உணவு முதலியன பழைய நூல்களில் கூறப்பட்டுள." தமிழரசர் அவர்களைக் கொண்டு வேள்விகள் செய்தனர். அவருள் பல்யாக சாலை முதுகுடுமிப்பெருவழுதி, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரன் செங்குட்டுவன் என்பவர் குறிப்பிடத்தக்கவர். அரசர்கள் அவர்களுக்குப் பொன்னும் பூவும் வழங்கினர்."நாட்டின் மீது படையெடுப்புநேரில், அந்தணர்காக்கப்பட்டனர்:"மதுரைளியுண்ட போதும் காக்கப்பட்டனர்." வந்தேறு குடிகளான பிராமணர் தமிழகத்தில் இவ்வளவு சிறப்புப் பெற்றமைக்கு, அவர்களுடைய கல்வி, ஒழுக்கம், தெய்வ பக்தியே காரணங்களாகும்.

இவ்வாறு தமிழகத்திற் புகுந்து அரசாற் சிறப்புப் பெற்ற அந்தணருட் சிலர் தமிழைக் கற்றுப் பெரும்புலவராய் விளங்கினர். அத்தகைய புலவர் ஏறத்தாழ 25 பேர் பழைய நூல்களில் பாடியுள்ளனர். கபிலர் என்ற பிராமணப் புலவர் பாரிவேளின் உயிர்நண்பராக இருந்தார்; பரணர் சேரன் செங்குட்டுவனால் மதிப்புப் பெற்றார். இத்தகைய புலவர் சேர்க்கையாலும் பிராமணத் தவசிகள் கூட்டுறவாலும் தமிழரசர்கள் வேத வேள்விகள் செய்தனர். வைதிகர் கூட்டுறவினால் தமிழகத்துப் பழைய வழிபாட்டு முறைகள் புதிய தோற்றம் எடுத்தன. முருகன் சுப்ரமணியன் ஆனான்; கொற்றவை உமாதேவியானாள்; முது முதல்வனான சிவன் ருத்ரன் ஆனான்; வைதிகச்சடங்குகளும் இதிகாச புராணக் கதைகளும் வழக்காறு பெற்றன." சிவனுக்கு முதல் இடம்

சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக் காஞ்சி என்னும் நூல்களில் கோவில்களின் வரிசையைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் சிவபிரான் திருக்கோயிலே முதன்மை பெற்றுள்ளதைக் காணலாம். - 3. .

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்;" நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்;"

நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துப் பூதமீறாக."