பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி *s29 ג

2.தமிழகத்தில் கோயில்கள் இருந்தன. அவை அழியத்தக்க மண், மரம் முதலிய பொருள்களால் ஆனவை. கோயில்களிற் கடவுளர் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுப் பூசிக்கப்பட்டன. விழாக்கள் நடைபெற்றன. விழாக் காலத்தில் திருமேனிகள் ஊர்வலம்ாகக் கொண்டு வரப்பட்டன. கோவில் மண்டபங்களில் கண்கவர் ஒவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. கோயில்களில் ஆடல்-பாடல்கள் நடைபெற்றன. -

3. லிங்க வணக்கமும் தட்சிணாமூர்த்தி வணக்கமும் சிவன் கோயில்களில் இருந்தன. -

4. அருகர் பள்ளி, பெளத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி முதலியவற்றிற் கல்வி ஒழுக்கங்களிற் சிறந்ததுறவிகள் இருந்து பொது மக்கட்கு அறிவுபதேசம் செய்தனர். -

5. தமிழரசர் எல்லாச் சமயவாதிகட்கும் நாட்டில் இடமளித்தனர். அவர்கள் வெளிப்படையாகப் பூசல் புரியவில்லை. ஆயினும் பெளத்தம் சமணம் முதலிய புறச் சமயங்கள் மீது ஆவூர் மூலங்கிழார், கெளனியன் விண்ணந்தாயன் போன்ற சிலர்க்கேனும் வெறுப்பு இருந்தது என்பது தெரிகிறது. --

6. தமிழரசர் வேத வேள்விகள் செய்தனர்; வைதி கர்க்கு ஊர்களையும் நிலங்களையும் தானம் செய்தனர். வைதிகர் செல்வாக்கு நாட்டில் படிப்படியாக வளர்ந்தது; வடமொழியும் வைதிக சமயக் கொள்கைகளும் இதிகாச புராணக் கதைகளும் நாட்டிற் பரவலாயின. - -

7. திகம்பர சமணத் துறவிகள், பெளத்த சமயத்துறவிகள்,

வைதிகத் துறவிகள், சைவத் துறவிகள். தமிழகத்தில் இருந்தனர். சமண, பெளத்த சமயங்களிற் பெண் துறவிகளும் இருந்தனர்."

8.நக்கீரரது திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என்பன முருகன், திருமால் பற்றிய பாடல் நூல்கள் என்றே கூறத்தகுவன, அக் காலத்தில் தோத்திரப் பாக்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதை நினைவூட்டுவனவாக இவற்றைக் கொள்ளலாம். பரிபாடலில் உள்ள திருமால் துதிகளும் அக்கால மக்களது பக்தியை நன்கு உணர்த்துவன.

9.பல்லவர்க்கு كاتالافون கால மக்கள் இறையனார், வெண்பூதி, பெருந்தேவனார் போன்ற சிவனுக்குரிய பல பெயர்களைப் பூண்டிருந்தனர்.