பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி -ు 37

வீரமரபினர் என்று கொள்ளவே அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் இடந்தருகின்றன.' -

களவர் என்னும் தமிழ்ப் பெயர், கன்னடத்தில் களபரு என்று மாறும்.அது வடமொழியில்களப்ரா என்று மாறும்.இவர்கள் வேங்கடம், காளத்தி முதலிய மலைப்பிரதேசங்களில் வாழ்ந்த வீரமரபினர். பல்லவர் தெற்கு நோக்கி வந்தபொழுது, இவர்கள் இடைஞ்சலுற்றுத்தொண்டை நாட்டையடைந்தனர்; பின்னர்ப்பல்லவர்காஞ்சியைக் கைப்பற்றியதும் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் புகுந்து, சோழ, பாண்டியரை விரட்டி நாடுகளைக் கைப்பற்றினர்; பல்லவர்க்கும் ஓயாத தொல்லைகள் கொடுத்தனர். குமார விஷ்ணு இவர்களிடமிருந்தே காஞ்சியைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும.'

சோழர்கள்

கோச்செங்கணான் பெயரைக் குறிக்கும் புறநானூற்றுப் பாடலின் அடிக் குறிப்புக்கும் அப் பாடற் பொருளுக்கும் தொடர்பில்லை. மேலும் தொகை நூல்கள் காலத்தில் ஓர் அரசன் 70 சிவன் கோவில்கள் கட்டக்கூடிய அளவில் சைவப் பிரசாரமோ, சைவத்திற்கு ஆபத்தோ இருந்ததென்று கூறச்சான்றில்லை; கோச்செங்கணான் பெற்றோர்களின் பெயர்களான சுபதேவன், கமலவதி என்பன போன்ற வடமொழிப்பெயர்களைப் பண்டைத்தமிழ் நூல்களிற் காணக் கூடவில்லை. களவழியை ஆராய்ந்தால் கோச்செங்கணான் பெரும் படையையுடைய மன்னர்களை வென்றனன் என்பது தெரிகிறது. இங்ங்ணம் பல போர்களைச் செய்த அவன், பண்டைக் காலத்தவனாயின், அவனை அக் காலப் புலவர்கள் பாடியிருக்க வேண்டுமல்லவா? ஒரு பாட்டேனும் தொகை நூல்களில் இல்லையே! அவன் காலத்தில் தில்லை (சிதம்பரம்) சமயத்துறையில் பெயர் பெற்றதாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆயின், தில்லை' என்னும் பெயரே பழைய நூல்களில் இல்லை. இவற்றை நன்கு ஆராயின், கோச்செங்கணான் பல்லவர்க்கு முற்பட்ட காலத்தவனல்லன் என்று திட்டமாகக் கூறலாம். ஆயின், இவன் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினரான அப்பர் சம்பந்தராற் குறிக்கப்படலால், அவர்கட்கு முற்பட்டவனாவன். இப்பேரரசன் கி.பி.300-600-க்கு உட்பட்டவனாக இருக்க வேண்டும். பல சான்றுகளைக் கொண்டு ஆராயின், இவன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்னலாம்.'a இவன் காலம் இது என்பதை இராவ் சாஹிப், எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் சொல்லாராய்ச்சி கொண்டு முடிவு கட்டுகிறார்கள்."b