பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 దకో முற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்

மு. இராகவையங்கார்". பி.டி. சீநிவாச ஐயங்கார்'d போன்ற அறிஞர்களும் இக் கருத்தையே வெளியிட்டுள்ளார்கள். எனவே, இவனும் இவன் மரபினரும் இக் காலத்துச் சோழர்கள் என்று கொள்ளுதல் பொருத்தமாகும்.

இவர்கள் பல்லவருடனும் களப்பிரருடனும்போர்செய்தவராதல் வேண்டும்.

கங்கர்- கதம்பர்

ஏறத்தாழக் கி.பி. 350 முதல் மைசூர்ச் சீமை என்ற கங்கபாடியைக் கங்கர்கள் ஆளத் தொடங்கினர். அவர்கட்கு வடக்கே, வனவாசியைத் தலைநகராகக் கொண்ட குந்தள நாட்டை மயூர சர்மன் மரபினர் ஆளத் தொடங்கினர். அவர்கள் கதம்பர் எனப்பட்டனர். மயூரசர்மன் பல்லவர்க்குப் பகைவன்." அவன் மரபினரும் அங்ங்னமே. "அவர்கள் தமக்குத் தெற்கே இருந்த கங்கரைத் தாக்கினர். பல்லவர் கங்கரைக் காக்கக் கதம்பரைத் தாக்கினர். முதலாம் சிம்மவர்மன் என்ற பல்லவன் கதம்பரைத் தாக்கி, அரிவர்மன் என்ற கங்க அரசனை நிலைபெறச் செய்தான்; அவன் மகனான ஸ்கந்தவர்மன் இரண்டாம் மாதவன் என்ற கங்க அரசனை அரசனாக்கினான்."

பல்லவர்-சாளுக்கியர்

கி.பி.6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாதாபியைத் தலைநகராய்க் கொண்டு சாளுக்கியர் பேரரசினை நிலைநாட்ட முயன்றனர். சாளுக்கியர் தெற்கே நாட்டை விரிவாக்கல் பல்லவர்க்கு ஆபத்து ஆதலின், பல்லவர் எதிர்த்தனர். தொடக்க காலத்தில் பல்லவரும் இராஷ்டிர கூடரும் சேர்ந்து சாளுக்கியரைத் தாக்கினர். ஓயாது போர்கள் நடைபெற்றன." கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கங்க அரசனான துர்விநீதன் சாளுக்கியருடன் சேர்ந்துகொண்டு பல்லவரைத் தாக்கினான்.

இவ்வாறு இம் முதற் காலப் பல்லவர்கள் தெற்கே களப்பிரர் சோழர்களுடனும், மேற்கில் கதம்பருடனும் கங்கருடனும், பின்னர் வடமேற்கில் சாளுக்கியருடனும் ஓயாது போர்கள் செய்து வந்தமையால், அடிக்கடி காஞ்சியையும் தொண்டை நாட்டையும் விட்டு ஓட வேண்டியவராயினர். சிம்மசிஷ்ணு கால முதலே தொடர்ச்சியாகப் பல்லவர் காஞ்சியிலிருந்து ஆளலாயினர்.