பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி དར་མདོ་ཙྰ་བ་4 4

மதுரையில் சமணர் சங்கம்

முன் சொன்ன சமண ஆசாரியருள் ஒருவரான ரீ பூஜ்யமிபாதர் என்பவருக்கு மாணவரான வச்சிர நந்தி என்பவர், மதுரையில் (கி.பி. 470-இல்) ஒரு சங்கத்தை ஸ்தாபித்தார். இச் சங்கத்தில் சமணர்களே இருந்தனர். சமயப் பணியுடன் இலக்கியங்களிலும் ஈடுபட்டனர்; இச் சங்கத்தின் செல்வாக்கினால் பாண்டிய நாட்டில் சமணம் விரைந்து பரவியது எனக்கோடல் தவறாகாது." தமிழில் உள்ள கீழ்க்கணக்கு நூல்களுட் பல இச் சங்கத்தவரால் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருதுதல் பொருத்தமாகும்."

சுற்றுப்புற நாடுகளில் சமணம்

கங்கவரசே சிம்மநந்தி என்ற சமண முனிவரால் ஏற்படுத்தப் பட்டது. அதனால் கங்கவாடியாகிய மைசூர்ப்பிரதேசம் சமணத்திற்கு முதலிடம் அளித்திருந்தது. அதனை ஆண்ட பெரும்பாலான அரசர்கள், சமணர் கோயில்கட்கும் மடங்கட்கும் பொருள் உதவி செய்தனர். சில அரசர் காலங்களில் சமணம் ஒழிந்த பிற சமயக் கோயில்கட்கு அரசாங்க உதவி நிறுத்தப்பட்டிருந்தது; அதனால் விழாக்கள் தடைப்பட்டன."

கதம்ப அரசருள் சிலரும் சமணத்திற்கு ஆதரவளித்தனர். சாளுக்கிய அரசர்கள் சமணத்திற்கும் பேராதரவு அளித்தனர்.” முன் சொன்ன சமண ஆசாரியர்கள் அடிக்கடி வடநாடு சென்று சமயப் பிரசாரம் செய்து திரும்பியபொழுது, அவர்களுடன் வட இந்தியாவில்லிருந்து புதிய சமணத் துறவிகள் தென்னாடு வந்திருக்கலாம். கி.பி. 7-ஆம் நூற்றாண்டினரான சம்பந்தர் தம் காலச் சமணரைப் பார்த்து, "வடமொழியும் தென் மொழியும் அறியாதவர்" எனக் கூறியுள்ளதை நோக்க, அவர்கள் மேற்சொன்னவாறு தென்னாட்டிற்கு வந்த புதியவர்கள் என்பது பெறப்படுகிறது.

வைணவ சமயம்

பல்லவர் பட்டயங்களில் உள்ள விஷ்ணுகோபன், குமார விஷ்ணு, சிம்ம விஷ்ணு போன்ற வைணவப் பெயர்கள்.பல்லவருட் சிலரேனும் வைணவராக இருந்தனர் என்பதை உணர்த்தவல்லவை. விஜயஸ்கந்த வர்மனது மனைவியான சாருதேவி என்பவள், ஆந்திர நாட்டில் உள்ள தாலுராவில் இருந்த நாராயணன் கோயிலுக்கு நில தானம் செய்தாள்." இளவரசன் விஷ்ணுகோப வர்மன், தன்னைப்