பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி འམ་ཝུ་ S 43

சைவ சமயம்

பல்லவரும் சைவமும் (செப்புப் பட்டயங்களிலிருந்து)

சிவஸ்கந்தவர்மன், ஸ்கந்தவர்மன், ஸ்கந்த சிஷ்யன் போன்ற பெயர்கள் பல்லவருட் சிலர் சைவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஸ்கந்த சிஷ்யன் (கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலுக்குத் தானம் செய்தவன்." பல்லவர் பட்டயங்கள் பலவற்றில் நந்தி (எருது) முத்திரை காணப்படுகிறது. போர்க்களங்களிலிருந்து விடுத்தபட்டயங்களில் மட்டுமே சிங்க முத்திரை இருக்கிறது. பிற்பட்ட பல்லவர் பட்டயங்களிலும் நந்தியே காணப்பட்டாலும், சாளுக்கியர் வராக முத்திரையைக் கையாண்டாற் போலப் பல்லவர் நந்தி முத்திரையைக் கையாண்டதாலும் பல்லவரது நாட்டுச் சமயம் சைவம் என்று கூறலாம். இம் முதற்காலப் பல்லவர் பட்டயங்கள், பெரும்பாலன நான்மறையாளர்க்குக் கிராமங்களும் நிலங்களும் அளிக்கத் தோன்றியனவேயாகும். சிவஸ்கந்த வர்மன் அக்நிஷ்டோமம், வாஜபேயம், அசுவமேதம் என்ற வேள்விகள் செய்தவன்.” இவற்றை நோக்க, இக் காலப் பல்லவர்களுட் பலர் பல ஊர்களில் கற்றுவல்ல பிராமணர்களைக் குடியேற்றியவர் என்பதும், வேத வேள்விகளைச் செய்தவர்கள் என்பதும் சைவ வைணவ சமயங்களை ஒரளவு வளர்த்தவர்கள் என்பதும் அறியலாம். இக் காலப் பல்லவர் பட்டயங்களிலிருந்து இந்த அளவே அறிய முடிகின்றது.

பல்லவரும் சைவரும் (இலக்கியத்திலிருந்து)

'ஐயடிகள் காடவர் கோன் என்ற பல்லவ அரசர் பல நாடுகளை வென்றவர்; வட மொழிப் புலவர்; தமிழ்ப் புலவர் சைவத்தைப் பரப்பினார்; முடிவில் அரசை வெறுத்து மகனுக்குப் பட்டமளித்துச் சிவத்தலங்களைத் தரிசித்துத் தரிசித்துத் தலத்துக்கொரு வெண்பாவாகப் பாடினார். அந்நூல் க்ஷேத்திரவெண்பா ஆகும் என்பது. பெரிய புராணக் கூற்று.” இவர் வடமொழிப் புராணத்தில் சிம்ஹாங்க, பாதசிம்ஹா பஞ்சபாத சிம்ஹா என்ற பெயர்களை உடையவராகக் காண்கிறார். மேலும் இவர் மகன் பீமவர்மன் என்று அந்நூல் கூறகிறது. பல்லவர் பட்டியலில் பீமவர்மன், சிம்மவிஷ்ணு என்பவர் கட்குத் தந்தையார் மூன்றாம் சிம்மவர்மன் என்பது காண்கிறது. 'பஞ்சபாத' என்பதன் தமிழ்மொழி பெயர்ப்பே ஐயடிகள்' என்று