பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம்

பெரிய புராணத்துட் கூறப்படும் விவரங்கள் கொண்டும், பிற சான்றுகள் கொண்டும் காண்கையில், வேறு சிலரும் அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்டவராகக் காண்கின்றனர்.

1. புகழ்ச் சோழர் : உறையூரைத் தலைநகராகக் கொண்டவர். கொங்கர், குடகரை வென்றவர், சைவத்தை வளர்த்தவர். கொங்கு - குடகு நாடுகளை வென்ற சோழப் பேரரசர் எவரும் மகேந்திரவர்மன் முதலிய பிற்காலப் பல்லவர் காலத்தில் இருந்திருக்க முடியாமையானும், இவர் பெயர் பல்லவர்க்கு முற்பட்ட தமிழ் நூல்களிற் காணாமையானும், இவர் முற்காலப் பல்லவர் காலத்தவராகக் கோடலே ஏற்புடையது."

2. புகழ்ச்சோழரது யானையைக் கொன்று, அவரால் மதிப்புப் பெற்ற எறிபத்த நாயனார் காலமும் முன் சொன்னதேயாகும்."

3. கூற்றுவ நாயனார் : இவர் களப்பிர மன்னர் பல நாடுகளை வென்றவர். இவர் தமக்கு முடி சூட்டுமாறு தில்லைவாழ் அந்தணரை வேண்ட, அவர்கள், சோழர்க் கன்றிப் பிறர்க்கு முடி சூட்டோம் என்று கூறி மறுத்து, அவரது சீற்றத்திற் கஞ்சிச் சேரநாடு புகுந்தனர்." தில்லைவாழ் அந்தணர் களப்பிர அரசர்க்கு அஞ்சத்தக்க நிலையில் சோழர் வலியிழந்து நின்றனர் என்பது இதனால் தெரிகிறது. ஆதலால் கூற்றுவ நாயனாரும் இம் முற்காலப் பல்லவர் காலத்தவரேயாவர்."

4. மூர்த்தி நாயனார் : இவர் மதுரை வாணிகர்; சிறந்த சிவபக்தர்: தினமும் சிவன் கோயிலுக்குச்சந்தனம் அரைத்துக் கொடுத்தவர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டைக் கவர்ந்த களப்ர அரசன், புறச்சமயச் சார்புடையவன். அவன் இவர்க்குச் சந்தனம் கிடைக்காதபடி செய்தவன்." இக் குறிப்பால் இவரும் கடுங்கோனுக்கு முற்பட்ட காலத்தவராவர்." .

5. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் : இவரைப்பற்றி முன்பே கூறப்பட்டது.

6. காரைக்கால் அம்மையார் : இவர் தலையால் நடந்த பதியாதலின், திருவாலங்காட்டைச் சம்பந்தர் மிதிக்க அஞ்சி, ஊரின் வெளிப்புறத்தில் தங்கினார் என்று சேக்கிழார் கூறலும்,'அதற்கு ஏற்ப, சம்பந்தர் பாடிய திருவாலங்காட்டுப் பதிகத்தின் முதற்செய்யுள் அதனைக் குறிப்பாக உணர்த்தலும்" நோக்க, இவ்வம்மையார் சம்பந்தர்க்கு முற்பட்டவர் என்பது தெரிகிறது. ஆதலால் இவரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராவர்.