பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி = - 47

7. திருமூலர் : இவர் செய்த திருமந்திரம் என்னும் நூலை நன்கு ஆராய்ந்து, இவர் ஏறத்தாழக் கி.பி. 6-ஆம் நூற்றாண்டினர் ஆகலாம் என்று டாக்டர் இரமண சாஸ்திரி கூறியுள்ளார்." மற்றோர் அறிஞரும் அந் நூலைப் பலபடி ஆராய்ந்து, இவர் கி.பி. 300-க்கும் 600-க்கும் இடைப்பட்டவராவர் எனக் கூறியுள்ளார்."

இவர்கள் வரலாறுகள் உணர்த்தும் சைவ சமயச் செய்திகள்

கோச்செங்கணான் : இவன் சிதம்பரத்தில் சிவனருளாற் பிறந்தவன்; பகைவரைவென்று பேரரசன் ஆனவன்; திருவானைக்கா முதலிய இடங்களில் பல சிவன் கோயில்களைக் கட்டினவன்; தில்லையில் மறையவர்க்கு(தில்லை வாழ் அந்தணர்க்கு) மாளிகைகள் கட்டிக்கொடுத்தவன்.” இவன் 70 சிவன் கோயில்களைக் கட்டினவன் என்றும், திருமாலை வழிபட்டவன் என்றும் திருமங்கையாழ்வார் கூறுகிறார்." இவன் சிதம்பரத்தில் சிவனருளாற் பிறந்தவன் ஆதலின், தில்லைக் கோயிலைச் சிறப்பித்திருக்கக் கூடும்; தில்லைவாழ் அந்தணரைக் குடியேற்றி வீடுகள் அளித்திருக்கக் கூடும். முன் நூல்களிற் காணப்பெறாத தில்லைக்கோயில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அப்பர் முதலியோரால் கோயில் என்றே சிறப்பாகக் குறிக்கப்பட்டதெனின், அது கோச்செங்கணான் காலமுதலே சிறப்படைந்து, தமிழகத்துக் கோயில்களில் தலைமணியாக விளங்கியதென்று கூறல் தவறன்று."

சண்டீசர் : இவர் பிராமணச் சிறுவர்; கும்பகோணத்திலிருந்து 6 கல்தொலைவில் உள்ள சேய்ஞலூரினர்.அதற்கு அருகில், இவர்பூசித்த லிங்கம் ஆப்பாடிக் கோயிலில் இருக்கிறது.’ இவர் பூசைக்காக வைத்திருந்த பாற்குடத்தை உதைத்துத் தள்ளிய தந்தையின் காலை வெட்டிச் சிவனருள் பெற்றவர். சிவன் உமாதேவியுடன் வந்து இவர் முடியில் கொன்றைமாலை சூட்டி இவருக்குச் சண்டீசப்பதம்’ அளித்தார்." அச் சிறப்பால், சண்டீசர் உருவம் ஒவ்வொரு சிவன் கோயில் உட்பிரகாரத்திலும் தனிக் கோயிலில் வைக்கப்பட்டது; கோயில் தானங்கள் அவர் பெயருக்கே செய்யப்பட்டன; கோயில் சொத்துக்களுக்கு அவர் மேற்பார்வையாளராய்க் கருதப்பட்டார். இந்த உண்மையைப் பிற்காலப் பட்டயங்களையும் கல்வெட்டுக்களையும் கொண்டு அறியலாம். இவர் அப்பர் - சம்பந்தரால் மிகுதியாகப் பாடப்பட்டவர்." -

இவர் வேடர்; கண்ணைப் பெயர்த்துச் சிவனது கண்ணில் அப்பிய இவரது பக்தி, அப்பர் முதலிய அடியார்