பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி పె) 51

நக்கீரதேவர் கோபப் பிரசாதத்தில் கண்ணப்பர், சண்டீசர், சாக்கியர், கோச்செங்கட்சோழர் இந்நால்வர் பக்தியையும் பாராட்டியுள்ளார். இவர் நூல்களில் பல தலப்பெயர்கள் இருத்தலைக் காண, இவர் காளத்தி, திருஈங்கோய்மலை, திருவலஞ்சுழி முதலிய தலங்களைத் தரிசித்தவராகக் காண்கிறார்.

2. கபிலதேவ நாயனார்:இவர் (1) சிவபெருமான் திரு.அந்தாதி, (2) சிவபெருமான் இரட்டைமணிமாலை, (3) மூர்த்தி நாயனார் திருவிரட்டை மணிமாலை என்னும் மூன்று நூல்களைப் பாடியவர். இவற்றில் ஓரடியாரும் குறிக்கப் பெற்றிலர். பின்வந்தோர் அனைவராலும் குறிக்கப்பெற்ற கண்ணப்பரையும் குறியாமையின், இவர் கண்ணப்பர்க்கும் முற்பட்டவர் எனக் கொள்ளலாம். புறநானூறு போன்ற பழைய நூல்களில் உள்ள கபிலர் நடைவேறு; இவரது நடை வேறு. மேலும் இவர் அப்பழங்காலத்தில் இல்லாத அந்தாதி, இரட்டைமணிமாலை பாடியவர்; பழங்காலத்தில் இல்லாத விநாயகரைப் பாடியவர். எனவே, இவர் முதற்காலப் பல்லவர் காலத்தினரேயாவர். -

இவர் குறித்துள்ள சிவத்தலங்கள் பல. இரட்டைமணி மாலையில் (1) வெண்காடு, (2) முதுகுன்றம், (3) அதிதை, (4) ஒற்றியூர், (5) மறைக்காடு, (6) வாய்மூர், (7) தில்லை, (8) ஆரூர், (9) ஐயாறு, (10) பாண்டிக் கொடுமுடி, (11) கோவலூர், (12) சத்தி முற்றம் என்னும் பன்னிரண்டு தலங்களைக் குறித்துள்ளார்."

சிவபெருமான் திருவந்தாதியில் குறித்துள்ள தலங்கள் இவையாகும். (1) ஆவூர், (2) ஆமாத்துர், (3) கூடல், (4) சிராமலை, (5) நாரையூர், (6) வக்கரை, (7) கானப்பேர், (8) ஆக்கூர், (9) குரக்குக்கா, (10) கோகரணம், (11) குற்றாலம், (12) பழனம், (13) புகலூர், (14) களந்தை, (15) தலையாலங்காடு, (16) செங்குன்றுார்."

இரட்டைமணி மாலையில் வந்துள்ள தலப் பெயர்கள் அந்தாதியில் வாராமை காணத்தக்கது. இந்த 28 தலங்களும் இவர் காலத்தில் சிறப்புற்றிருந்தன என்பது தெரிகிறது. இவர் ஒவ்வொன்றையும் தனித்தனிச் செய்யுளிற் கூறலை நோக்க, இவர் இத்தலங்களைத் தரிசித்தவராகலாம். - -

விநாயகர் வழிபாடு : கபில தேவ நாயனார் விநாகர் மீது 20 செய்யுட்களைப் பாடியுள்ளார். விநாயகர் வழிபாடு பல்லவர்க்கு முற்பட்ட இலக்கியங்களில் இல்லை என்பது முன்பே கூறப்பட்டது. மூத்த பிள்ளையார் என்ற பெயர் விநாயகர்க்குக்கபிலதேவர்காலத்தில்