பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி R) 53

ஐயடிகள் முதலியோர் பாடிய பாக்களும் அவற்றில் இடம் பெற்றிருத்தல் கூடியதே எனக் கருதல் தவறாகாதன்றோ? -

பரணதேவர் பாக்கள் இரண்டில், தில்லையில் பொன்னம்பலம் இருந்தது என்ற செய்தி காணப்படுகிறது' நக்கீரர், கபிலதேவர் பாடல்களில் ஈற்றிற் காணாத பாடினோர் பெயர், நூல் படிப்பதால் பயன் என்பன, காரைக்கால் அம்மையார் பாடிய திருவந்தாதி யீற்றிலும் பரணதேவர் பாடிய திருவந்தாதி யீற்றிலும் இருப்பதும் கவனிக்கத் தக்கது. இக் குறிப்பு, பலரையும் பயன்கருதிப் படிக்கத் தூண்டும் - அதனால் சைவசமயம் வளரும் என்னும் கருத்துடன் தரப்பட்டதாகும். இம் முறையையே பின்வந்த சம்பந்தரும் சுந்தரரும் மிகுதியாகக் 65)55ULifT6öğ{L-6öfff,

4. கல்லாடனார் : இவர் கண்ணப்பதேவர் திருமறம் என்னும் பெயரால் 30 வரிகளைக் கொண்ட அகவற்பா ஒன்று மட்டும், கண்ணப்பர் பக்தியை விளக்கிப் பாடியுள்ளார். அதில் வந்துள்ள உத்தரியம், தாமம், மஞ்சனநீர், நயனம் என்னும் வடசொற்கள் புறநானூறு முதலிய பழைய நூல்களிற் காணாமையால், இவர் அந் நூல்களின் காலத்தவர் அல்லர் என்னலாம்; கண்ணப்பரைத் தவிர, அப்பர், சம்பந்தர் போன்ற சைவம் வளர்த்த பெரியார்களைப்பற்றி ஒன்றுமே குறியாததால் அப்பர்- சம்பந்தர்க்கு முற்பட்டவர் என்னலாம். இதே கருத்தை அறிஞரும் கூறியுள்ளனர்." கி.பி. 9-ஆம் நூற்றாண்டினரான மாணிக்கவாசகரைக்' குறித்துள்ள 'கல்லாடம்" பாடிய கல்லாடர் வேறு என்பது இங்கு அறியத்தக்கது.

கடல் நாகைக் காரோணம் : நாம் இப் பகுதியிற் கண்ட சுமார் 70 கோயில்களுக்கும் இல்லாத புதுப் பெயராக இது ("காரோணம்' என்பது) காணப்படுகிறது. இதனைப் பரணதேவர் ஒருவரே குறித்துள்ளார். ஆதலின், இப் பெயர் ஆராய்ச்சிக் குரியது. திருவொற்றியூர்ச் சிவன் கோயிலில் படம் பக்கநாயக தேவர் கோயில் ஒன்று வீரராசேந்திரன் காலத்திற் (கி.பி. 1067-8) கட்டப்பட்டது. அக் கோயில் மூர்த்தத்தின் பெயர் 'காரானைவிடங்கர் என்பது. அஃதாயின் 'காரானை' என்பது ஒற்றியூரின் பழைய பெயராதல் வேண்டும். அது லகுலீசபாசுபதர் வாழ்ந்த இடமாகவும், அச்சமய முதல்வரான லகுலீசர் பிறந்த (பம்பாய் மாகாணத்துக்) கார்வான் என்ற ஊர் நினைவாக அப் பாசுபதர் போற்றிய இடமாகவும் இருத்தல் வேண்டும். காராணை, காரோஹணம் என்பன இன்றைய கார்வான் என்ற ஊரின் பழைய பெயர்கள். எனவே, காரோஹணத்தைச் சேர்ந்த லகுலீசர்க்கும்