பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம்

திருவொற்றியூரில் வழிபடப்பட்ட படம்பக்க நாயகதேவர்க்கும் தொடர்பு இருத்தல் வேண்டும்."

லகுலீசர் சுமார் கி.பி. 2ஆம் நூற்றாண்டினர். அவர் தமக்கு முன் நீண்ட காலமாக நாட்டில் இருந்துவந்த பாசுபத சமயத்தைப் புதுப்பித்தவர். அவரால் புதுப்பிக்கப்பட்ட சமயம் லகுலீச பாசுபதம் எனப்பட்டது. சிவனே லகுலீசராக வந்தார் என்பது அவர்தம் அடியார் கருத்து." அச் சமயத்தவர் தெற்கே பரவித் தங்கிய இடங்களில், மேற்சொன்ன திருவொற்றியூரைப் போல நாகையும் ஒன்றாகலாம். அங்கிருந்த கோவிலைஅத்தங்கள் மதத்தலைவர் பிறந்த காரோஹனம் போலச் சிறந்ததாகக் கருதிப் பெயரிட்டிருக்கலாம். காரோஹனம்' என்பது நாளடைவில் காரோணம் என மருவுதல் இயல்பே; இதனால் நாகையில் லகுலீசபாசுபதர் இருந்தனர் என்பதை அறியலாம்.

முடிவுரை

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளால் கீழ்வரும் உண்மைகள் அறியப்படும் :- - &

1. முதற்காலப் பல்லவர் காலத்தில் (கி.பி. 300-600) பல்லவர்களப்பிரர் - சோழர் - கதம்பர் - கங்கர் - சாளுக்கியர் போர்கள் நடைபெற்றன - பல்லவரிடமிருந்து காஞ்சி அடிக்கடி கை மாறியது - சோழபாண்டிய நாடுகள் உரிமை இழந்தன - உரிமைப் போராட்டங்கள் நடைபெற்றன.இவற்றால் நாட்டில் முற்றிலும் அமைதி இருந்தது என்று கூறக் கூடவில்லை. ஏறத்தாழக் கி.பி. 575-இல் சிம்ம விஷ்ணு காஞ்சியையும் கடுங்கோன் மதுரையையும் கைப்பற்றி ஆளத் தொடங்கினர்.

2. இக் காலத்தில் பெளத்த-சமண சமயங்கள்களப்பிரரால் மிக்க செல்வாக்குப் பெற்றன. சமணம் மிகுதியாகச் செல்வாக்குப் பெற்றது. சமண - பெளத்தர்கள் சிறந்த படிப்பாளிகள், நாடெங்கும் சுற்றிச்சமயப் பிரச்சாரம் செய்தனர். வைதிகப் பிராமணரால் வேதங்களும் புராணக் கதைகளும் தமிழ் நாட்டில் பரவின. வடநாட்டுப் பாகவத மதம் தமிழகத்திற் பரவியது.

3. பல்லவர்கள் வைதிகப் பிராமணர்க்குக் கிராமங்களும் நிலங்களும் மானியமாக அளித்தனர்; சமணர் பெளத்தர்களையும் ஆதரித்தனர்.

4. கோச் செங்கணான் தில்லைக்குச் சிறப்பளித்தான்; தில்லை வாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டித்தந்தான்; பல சிவன்