பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ༤ མ་ཧཱ:155

கோவில்களைக் கட்டினான். ஐயடிகள் காடவர்கோன் தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தார். புகழ்ச்சோழர், கூற்றுவநாயனார் போன்ற அரசர்கள் சிவன் கோவில்களை ஆதரித்தனர். மூர்த்தியாரால் பாண்டி நாட்டில் சைவம் தழைத்தது.

5.ஐயடிகள், காரைக்கால் அம்மையார், நக்கீரதேவர், கபிலதேவர், பரணதேவர், கல்லாடதேவர் என்ற அடியார்களின் பாடல்கள் ஏறத்தாழ 70 சிவன் கோவில்களைக் குறித்துள்ளன. அவர்கள் அத் தலங்கட்கு யாத்திரை செய்தவர்கள் என்றும் கூறலாம். அவர்கள் கண்ணப்பர் போன்ற சிறந்த அடியார்களைப் பற்றியும் பாடியுள்ளனர்.

6. பல கோயில்களில் ஆதிசைவர் (சிவமறையோர்) இருந்து ஆகமமுறைப்படி பூசை செய்யலாயினர். கோயில்களில் லிங்கம் இருந்தது. விழாக்கள் நடைபெற்றன; திருமேனிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கோயிலில் ஆண்டார் முதலிய தளிப் பரிவாரத்தார் இருந்தனர். கோயிலில் பண்ணுடைய தோத்திரப்

பாடல்கள் பாடப்பட்டன.

7. பிராமணர், ஆதி சைவர், முதலிய எல்லா வகுப்பினரும் சிவனடியாராக இருந்தனர். பக்தி ஒன்றுக்கே மதிப்புத் தரப்பட்டது என்பது, கண்ணப்பரை அடியார் பாராட்டலிலிருந்து அறியலாம். அடியார் அரசராயினும் ஆண்டியாயினும் வேறுபாடு காட்டிலர், சமயத் தவறுகள் அடியாரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டன, அடியார்க்குள் சைவ சமயக் கட்டுப்பாடு இருந்தது. விழாக் காலங்களில் சில மடங்களிலேனும் அடியார்க்கு உணவு, உடை வழங்கப்பட்டன.

8. சமணர், சமயம் நேர்ந்தபொழுது சைவரைப் பரிகசித்தனர்; பூசல் இட்டனர்; நாட்டு அரசன் தலையிடக் கூடிய நிலையை ஏற்படுத்தினர்; மூர்த்தியார் வரலாறும் வேள்விக்குடிப் பட்டயச் செய்தியுமே பாண்டிய நாட்டில் சமணர்கொடுமைக்குச்சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். சைவ சமய வளர்ச்சியைச் சமணர் தடுக்க முயன்றனர் என்பதற்கு இவ் விவரங்களே சான்றாகும். - .

9. லகுலீசபாசுபதர் தமிழகத்தில் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் நாகை ஒன்றாகும்.

10. காஞ்சி மத விசாரணை செய்யக்கூடிய அளவில் பல மதப் பெரியார்களைப் பெற்றிருந்தது; கல்வியில் மிக்க சிறப்புற்றிருந்தது.