பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி འཡོན་ཧྲེ་འུ 6S [|

காஷ்மீரில் பிரத்ய பிஞ்ஞான தரிசனம் எனப்பட்டது. அதுவே தென்னாட்டில் சுத்த சைவ தரிசனம் எனப்பட்டது.சைவ சித்தாந்தத்திற் கோயில் வழிபாடு புறச்சடங்குகளில் ஒன்றாக வற்புறுத்தப்படுகிறது.

ஆகமாந்த உண்மைகளைத் திருமூலர் திருமந்திரம் எடுத்துக் கூறுகிறது; திருமந்திரத்திற்கும் காஷ்மீரத்தில் தோன்றிய பிரத்ய பிஞ்ஞான தரிசனத்திற்கும் ஒருமைப்பாடு காணப்படுகிறது. திருமூலர் கயிலாயத்திலிருந்து வந்தவர் என்று வரலாறு கூறுகிறது. இவற்றை நோக்க, பிரத்ய பிஞ்ஞான தரிசனக் கருத்துக்கள் காஷ்மீரத்தில் சிறப்புற்றிருந்த காலத்தில், திருமந்திரம் செய்யப் பட்டதென்பது தெளிவு. -

இச் சைவத் துறையில், சிறந்த ஆசாரியர் இருவர் தோன்றினர்; ஒருவர் 'சிவதிருஷ்டி என்ற நூலைச் செய்த சோமநாதர் பரமார்த்த சாரம் என்ற நூலைச் செய்த அபிநவகுப்தர் மற்றொருவர். இவர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டினர். திருமூலர் இவ்விருவருக்கும் முற்பட்டவர்."

திருமந்திரச் செய்திகள்

திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும். ஒவ்வொரு தந்திரத்திலும் கூறப்பட்டுள்ள செய்திகளை ஒருவாறு இங்கு அறிய முயல்வோம். திருமூலர் காலத்துத் தமிழகத்தில் சைவ சமயம் இருந்த நிலையை உணர இச் செய்திகள் பெருந்துணை புரியவல்லவை.

1. முதல் தந்திரத்தில் யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, காம அடக்கம், அந்தணர் ஒழுக்கம், அரசன் கடமை, அறஞ் செய்தலின் சிறப்பு, அன்பை வளர்த்தல், பிறர்க்கு உதவி செய்தல்,கற்றோரிடமிருந்தும் நூல்களிலிருந்தும் அறிவை வளர்த்தல், மனத்தை விருப்பு வெறுப்புக்களிற் செல்ல விடாமை போன்ற அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. .

2. இரண்டாம் தந்திரத்தில் அகத்தியர் தென்னாடு போந்தது, சிவனுடைய எட்டு வீரச்செயல்கள், லிங்கத்தின் தோற்றம், தக்கயாகம், பிரளயம் பற்றிய புராணக் கதைகள் குறிக்கப்பட்டுள. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன சிவனுடைய ஐந்தொழில்கள் என்பதும், சக்தி, சிவன் விளையாட்டால் உண்டான ஜீவர்கள், விஞ்ஞானகலர், சகலர், பிரளயாகலர் என்னும் மூவகையினர் என்பதும், அவருள்மதிக்கத்தக்கவர்யாவர் என்பதும், விளக்க்ப்பட்டுள.