பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G2 LF- திருமந்திரம்

கோயில்களை அழிப்பது தீது, சிவ நிந்தை தீது, அடியார் நிந்தை தீது, என்பன பற்றியும், பொறையுடைமை, பெரியாரைத் துணைக்கோடல் என்பன பற்றியும் குறிக்கப்பட்டுள்ளன.

3. மூன்றாம் தந்திரம் முழுவதும் யோகத்தைப் பற்றியது; ஆனால் பதஞ்சலி கூறும் யோகமுறையன்று, இயமம் முதலிய எண்வகையோக முறைகளும் அவற்றால் அடையும் பயன்களும் பிறவும் கூறப்பட்டுள.

4. நான்காம் தந்திரம் மந்திர சாத்திரம் அல்லது உபாசன மார்க்கத்தைப் பற்றியது. அஜபாமந்திரம், பைரவி மந்திரம் கூறப்பட்டுள. திரு அம்பலச்சக்கரம், திரிபுர சக்கரம், ஏரொளிச் சக்கரம், பைரவச் சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், புவனாபதி சக்கரம், நவாகூடிரி சக்கரம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

5. ஐந்தாம் தந்திரத்தில் சுத்தசைவம், அசுத்தசைவம், மார்க்க சைவம், கடும் சுத்த சைவம் என்பன பேசப்பட்டுள; பிறகு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன குறிக்கப்பட்டுள; பின்னர்ச் சன்மார்க்கமும் அதன்பிரிவுகளான சகமார்க்கம், (கடவுளை நண்பராகக் கருதுதல்), சத்புத்ர மார்க்கம் (கடவுளைத் தந்தையாகக் கருதுதல்), தாசமார்க்கம் (கடவுளை எசமானனாகக் கருதுதல்) என்பனவும் விளக்கப்பட்டுள. அடுத்து, சாலோகம் (இறைவுலகில் வாழ்தல்), சாமீப்யம் (இறைக்கு அண்மையில் இருத்தல்), சாரூப்யம் (இறையுடன் சமநிலை பெறுதல்), சாயுச்யம் (இறையுடன் இரண்டறக் கலத்தல்) என்பன விளக்கப்பட்டுள. பிறகு கடவுள் சக்தி, மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்னும் நான்கு முறைகளில் இறங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. புறச் சமயங்கள் கண்டிக்கப்படுகின்றன; உட் சமயங்கள் ஏற்கப்படுகின்றன. -

6. ஆறாம் தந்திரத்தில் உயிர் நாடியாக உள்ளவை சிவகுரு தரிசனம், அவனது திருவடிப் பேறு, ஞானத்தின் பொருள், தெரிபவன், தெரியப்பட்ட பொருள், துறவு, தவம், அருளிலிருந்து தோன்றும் ஞானம், தக்கவர் (பக்திக்குப் பக்குவமுடையவர்) இலக்கணம், தகாதவர் இலக்கணம், திருநீற்றின் பெருமை என்பவையாகும்.

7. ஏழாம் தந்திரத்தில் ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள் (அண்ட லிங்கம், பிண்ட லிங்கம், சதாசிவ லிங்கம், ஆத்ம லிங்கம், ஞான லிங்கம், சிவ லிங்கம்), சமயச் சிறப்புப் போதனை, ஆத்மாவில் உள்ள சிவனுக்கியற்றும் வழிபாடு, குருவாகிய சிவனுக்கியற்றும் வழிபாடு, மாகேசுவரபூசை, அடியார் பெருமை,உணவு விதி, பலவகை முத்திரைகள், பலவகை யோகிகள் இறப்புக்குப் பின் அடையத்தகும்