பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி =o 69

மார்க்கம் என்பது சிவனைத்தந்தையாகவும்தன்னைப்பிள்ளையாகவும் கொண்டு வழிபட்டு முத்தியடையும் வழி.

சிவனைப் பூசித்தல், தோத்திர பாராயணஞ் செய்தல், போற்றுதல், செபித்தல், வாய்மை, அழுக்கின்மை உடையராதல், அபிடேகமாட்டல், தூப தீபாதிகள் காட்டல் என்பன இம் மார்க்கத்திற்குரியவை.' (4) தாச மார்க்கம் என்பது சிவனைத் தலைவனாகவும் தன்னை அடிமையாகவும் கொண்டு வழிபட்டு முத்தியடையும் வழி. விளக்கேற்றல், மலர் கொய்தல், கோயிலில் மெழுகுதல், மணியடித்தல், அபிடேக நீர்கொணர்தல், முதலிய கோயில் தொழில்கள் இத் துறைக்குரியன. (5) சக்தி நிபாதம் : இது (1) மந்தம், (2) மந்ததரம், (3) தீவ்ரம், (4) தீவ்ர தரம், என நால்வகைப்படும். இவை சிவனடியார் தகுதிக்கேற்ப இறைவன்

அருள்வான்." -

திருமூலரும் புறச் சமயங்களும் லோகாயதம், சாங்கியம் முதலிய ஆறு புறச் சமயங்களும் பக்தி நெறியைப் பற்றிக் கவலைப்படாதவை. அவை நாம் என்பதை அறிய முயலாதவை. ஆதலால் அச் சமயங்கள் பயனற்றவை," என்பது திருமூலர் கருத்து.

திருமூலரும் அகச் சமயங்களும் : சைவ உட்சமயங்கள் ஆறும் ஒரே முடிவுக்குக் கொண்டு செல்வன. இவற்றுள் ஒன்றைப் பின்பற்றுபவர் மற்றொன்றைப் பின்பற்றுபவரைக் குறை கூறுதல் தவறு. அங்ங்னம் குறை கூறுவோர் குன்றினைப் பார்த்துக் குரைக்கும் நாய்களை ஒப்பர்.” -

சிவபக்தி : பாசத்திலிருந்து விடுபட்டு முத்தியடைய விரும்பும் ஒருவன், பல படிகளைக் கடக்கவேண்டும். முதலில் குருபரம் அவனுக்கு முத்தி வழியைக் காட்டுவான்; அவ்வழியே சென்றால், சுத்த குரு தோன்றிக் கடவுள் அருளை நல்குவான். அந் நிலையில் பக்தன் மேற் சொல்லப்பட்ட சித்திகள், யோகச் சக்திகள் முதலியவற்றை அடைகிறான். அடுத்த நிலையில் சத் - குரு தோன்றிப் பக்தனுடைய ஆணவம் - மாயை - கன்மம் என்னும் மும்மலங்களை அகற்றுவான்; முக்திக்குச் செலுத்துவான். பின்னர்ச் சிவ குரு காட்சியளித்துச் சத், அசத், சத் - அசத் என்பவற்றைக் காட்டுவான். இந்த அறிவில் ஆன்மா நிலைத்தபொழுது சிவமாகிறது. சிவபிரானது திருவடிச்சிறப்பு நன்கு விளக்கப்பட்டுள்ளது. உண்மைப் பக்தர்களுடைய தலையிலும் உள்ளத்திலும் புருவ மத்தியிலும் திருவடி பதிக்கப்பெறும், அத் திருவடியே மந்திரம், மாமருந்து, தந்திரம், தானம், சுந்தரம், தூய நெறி,"