பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - திருமந்திரம்

சிவ அத்வைதம்: ஆன்மா'தான் வேறு,"அவன் வேறு என்னும் எண்ணத்தில் இருக்கும் வரை'த்வைதம் அல்லது இருமை இருக்கும். தனிப்பட்ட ஆன்மா அவனிற் கலந்து விடுமாயின், இருமை ஒழிந்து ஒருமை ஏற்படும்.” இது சிவாத்வைதம் எனப்படும்.

துறவு உள்ளத் துறவுகொண்டு மறதியின்றி இறைவனைப் பாடி புகழ்வோர் முத்தியடைவர். சிவன் துறவி, காடுகளில் வாழ்பவன்; பிச்சை ஏற்று உண்பவன்," துறவு கொண்ட பக்தர்களின் பிறப்புத் தளையை அறுக்கும் பித்தன், துறவிகள் இலக்கணத்தை உணர்த்தவே தான் துறவியானவன்."

லிங்க வழிபாடு : லிங்க வழிபாடு நாட்டில் மிகப் பழையது என்பது முன்பே கூறப்பட்டது. முதற்காலப் பல்லவர் காலத்தில் தமிழகத்தில் பல சிவன் கோயில்கள் கட்டப்பட்டன என்பதையும் முன்னர் அறிந்தோம்.திருமூலர் அக்காலத்தவர். தாவர லிங்கங்களைப் பெயர்த்து வேறு இடங்களில் தாபித்தால் அரசு நிலை கெடும்; இறக்கும்முன் பெருநோய் அடைவான்' என்று அறிவுறுத்தியுள்ளார். இக் கூற்றால் திருமூலர் காலத்தில் லிங்கங்கள் பிரதிட்டை செய்யப்பட்டமை நன்கறியலாம். ஏறத்தாழக் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட காசிகாண்டம் என்ற நூலும் அந் நூற்றாண்டில் வாழ்ந்த வராஹமிஹிரர் நூலும் லிங்க வணக்கத்தை வற்புறுத்துகின்றன; லிங்கம் செய்யப்படவேண்டும் முறையை மிக நுட்பமாகத் தெரிவிக்கின்றன." மேலும் வராஹமிஹிரர் இயற்றிய மிருகத் சம்ஹிதையில் 20 வகை விமானங்கள் கூறப்பட்டுள்ளன. அவை:மேரு, மந்திரம், கயிலாசம், நந்தனம், பத்மம், கருடம், குஞ்சரம், ரிஷபம், ஹம்சம், கடம், சிம்ஹம் முதலிய பெயர்களை உடையன."a இவ்விவரங்களால் அந்த நூற்றாண்டில் இந்தியாவில் விமானமுடைய பல சிவன் கோயில்கள் புதியனவாகக் கட்டப்பட்டன, லிங்கங்கள் பிரதிஷ்டிக்கப்பட்டன என்பன தெளிவாகின்றன. “மாஹேஸ்வரர்க்குப் பகல் உணவு தருவது ஆயிரம் கோபுரங்கள் (கோயில்கள்) கட்டுதலை விடச் சிறந்தபயனைத் தரும்," என்று திருமூலர் கூறுகிறார். இதனால் அவர் காலத்தில் தமிழகத்தில் பல கோயில்கள் புதியனவாகக் கட்டப்பட்ட்ன என்பது தெரிகிறது. அப்பர் சம்பந்தரால் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் குறிக்கப்பெற்ற கோயில்கள் சுமார் 325. அவற்றுள் முன் சொன்ன பரணதேவர், கபிலதேவர் முதலியவராற் பாடப்பட்டவை சுமார் 70 என்பதை நோக்க, எஞ்சியவற்றுட் பல கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டுகளிற் புதியனவாகக் கட்டப்பட்டன எனல் பொருந்தும், திருமூலர் காலத்தில் படிக லிங்கம், பொன் லிங்கம், மரகதலிங்கம், கல் லிங்கம், மணல் லிங்கம் இருந்தன."