பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரம் كي ج 72

முற்காலப் பல்லவர் காலத்தில் சிலர் குடியேறினர் என்பது பட்டயங்கொண்டு மெய்ப்பிக்கப்பட்டது. திருமூலர், 'அந்தணர்க்கு ஆயிரம் அகரங்கள் (அக்கிரகாரங்கள்) ஈதலைவிட மாஹேஸ்வரர்க்குப் பகல் உணவு ஈதல் மிக்க பயனைத் தரும்'," என்று கூறுதலை நோக்க, அவர் காலத்தில் தமிழ் நாட்டில் பல புதிய கிராமங்கள் நான்மறையாளர்க்குக் கொடுக்கப்பட்டன என்பது தெரிகிறது.

'வேள்வி செய்யும் கோடி மறையவர்க்குத் தரும் உணவை விட, நீறணிந்த பக்தர்க்குக் கொடுக்கும் ஒரு பிடி உணவு மிக்க பயனைத்தரும்." என்று திருமூலர் கூறியுள்ளார். இதிலிருந்து, அவர் காலத்தில் தமிழகத்தில் வேள்விகள் பல செய்யப்பட்டன என்பதும், வேதியர் உண்பிக்கப் பட்டனர் என்பதும் தெளிவாகின்றன. வேள்வியியற்றுவதை விட அடியாரை உண்பித்தல் மிகச் சிறந்த சமயத்தொண்டு என்பது திருமூலர் கருத்து என்பதும் தெளிவாகின்றது.

சிவகதைகளும் திருமூலர் விளக்கமும்

சிவன் சம்பந்தமான பழைய கதைகட்குத் திருமூலர் தரும் விளக்கம் கவனிக்கத்தக்கது : (1) சிவபிரான் முப்புரங்களை எரித்தான் என்பது ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களாலாகிய ஸ்துல சூட்சும-காரணம் என்னும் மூன்று உடலங்களை அழித்தான் எனப்பொருள்படும்' என்று கூறியுள்ளார். (2) வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்ததால் சிவன் அதைச் சமப்படுத்த அகத்தியனைத் தெற்கே அனுப்பினான் என்பது கதை. உலகம் சமனிலை தவறியது என்பது மக்கள் நடுவு நிலை தவறினர் என்பதாகும். குண்டலினி நெருப்பை எழுப்ப இறைவன் மக்கட்கு உணர்ச்சியூட்டல் என்பதே இக் கதையின் உட்கொள். குண்டலினி என்னும் ஒளியே அகத்தியர் என்று கூறப்படுவது." (3) சிவன் விடத்தை உண்டு கழுத்தில் வைத்திருக்கிறான் என்பது கதை, அறியா மக்கள் சிவன் விடத்தை உண்டான் என்று கூறுவர். சிவன் விடத்தை உண்ணவில்லை. அவன் ஜீவாத்மா, பரமாத்மா, கீழ் நிலைச் சிவன், நான்கு துரிய நிலைகள், இவற்றுக்கு அப்பாற்பட்ட உலகங்கள் என்பனவற்றை விழுங்கினான்; விழுங்கி அவற்றைக் கரியவாக்கினான்." அஃதாவது, சிவன் இவற்றைத் தன்னுள் அடக்கியுள்ளான். (4) திருமாலும் நான்முகனும் சிவனுடைய அடியையும் முடியையும் காணவில்லை என்பது கதை. விஷ்ணு சிவனது சக்தியை உணரக் கூடவில்லை, பிரமன் சிவ ஞானத்தை உணரக்கூடவில்லை என்பதே கருத்து." இங்குப் பிரமன் என்பது வேதம்."