பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ಸ್ಧ: 75

6. திருமூலர் சிவனுடைய எட்டு வீரச் செயல்களைக் குறித்து, அவற்றில் இரண்டு கடவூர், குறுக்கை என்னும் தலங்களில் நடந்தனவாகக் கூறியுள்ளார். பின்வந்த அப்பர் முதலானோர், கண்டியூர், கோவலூர், அதிகை, கருப்பறியலூர், விற்குடி, வழுவூர்,” குறுக்கை, கடவூர்களில் எட்டு வீரச் செயல்கள் நடந்தன எனத் தம் பாக்களிற் குறித்துள்ளனர். -

7. எப்பரி சாயினும் ஏத்துமின் எத்தினால்

அப்பரி சீசன் அருள்பெற லாமே."

இக் கருத்து,

எப்பெருந்தன்மையும் எவ்வெவர் திறமும்

அப்பரி சதனால் ஆண்டுகொண்டருளியும்."

எனவரும் திருவாசக அடிகளில் பிரதிபலிக்கிறதன்றோ?

8. இங்ங்ணம் பின்வந்த அப்பர் முதலியோர் திருமூலர் கருத்துக்களை எடுத்துக் கொண்டதன்றித் திருமூலர் ஆண்ட சொற்களையும் தொடர்களையும் அப்படியே ஆண்ட இடங்கள் பல. அவற்றுள் மாதிரியாக இரண்டைக் காட்டுதும்:

(1) வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே'

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்."

(2) அத்தன் திருவடிக்கப்பாலைக் கப்பாலாம்."

அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்."

(3) சீரார் பிரான் வந்தென் சிந்தை புகுந்தனன்."

சிவன வனென் சிந்தையுள் நின்ற அதனால்."

இவ்வாறு அப்பர், சம்பந்தர் முதலியோரைத் தன்வயப்படுத்திய இத் திருமந்திரமே தமிழ்நாட்டில் அப்பர் முதலியோர்கையாண்டசன்மார்க்க சைவம் பரவுவதற்கு ஆதார நூலாக இருந்தது என்பதும், பின்வந்த் சைவ சித்தாந்த சாத்திரங்கட்குத் தூண்டுகோலாக இருந்தது என்பதும் மிகையாகாது. வரலாற்று ஆசிரியரால் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்பட்ட கி.பி. 4-5-6-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் சைவ சமய வரலாற்றை அறிய இந் நூல் பெருந்துணை புரிவதென்பதில் ஐயமில்லை. இங்ங்ணம் அருந்துணை புரியும் இந் நூலியற்றிய திரு மூலர்க்கு நமது நன்றி உரியதாகுக,