பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் -1

கூற்றாகக் குறித்துள்ளான். இவன் நடனத்தில் பெரும் பற்றுடையவன் என்பதைச் சித்தன்னவாசல் நடிகையர் ஓவியங்கள் உணர்த்துகின்றன. எனவே, இவன் காலத்தில் இசையும் நடனமும் உயர்நிலையில் இருந்தன் என்பதை நன்கு உணரலாம். அதனாற்றான் இவன் காலத்தவரான அப்பருடைய திருப்பதிகங்களில் நடனத்தைப் பற்றிய குறிப்புக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

"வேறு துறையிலிருந்து குணபரனைத் திருப்பிய ஞானம் இந்த லிங்கத்தால் நாட்டில் நீண்ட காலம் பரவட்டும். குணபரன் லிங்க வழிபாட்டினன்,' 'புருஷோத்தமன் தன் மனத்தில் சிவனை உறுதியாகப் பற்றியிருப்பவன்,' என்பனவும், குடுமியான்மலை இசைபற்றிய கல்வெட்டில், 'சித்தம் நமசிவாய' என்று சிவனுக்கு வணக்கம் கூறும் பகுதியும் மகேந்திரனது ஆழ்ந்த சிவபக்தியை நன்கு உணர்த்துவனவாகும்.

பல்லவன் ஈசுவரம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பது. அப்பட்டினத்தின் எல்லையில் முன்சொன்ன கோயிலுக்குக்கால் மைல் தூரத்தில் சாய்க்காட்டுக் கோயில் இருக்கிறது. சாய்க்காட்டுக் கோயிலை அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர். ஆனால் பல்லவனீச்சுரத்தைச் சம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார்; அப்பர் பாடவில்லை. கால் மைல் தூரத்தில் உள்ள அதனை அப்பர் பாடாமைக்கு என்ன காரணம்? அவர் பாடிய ஏடு கிடைக்கவில்லை என்பது ஒரு காரணமாகலாம். அப்பர் சாய்க்காட்டைத் தரிசித்த பிறகு பல்லவனால் (பெரும்பாலும் மகேந்திரவர்மனால்) அக் கோயில் கட்டப்பட்டதாகக் கொள்வதும் பொருந்தும்,மயேந்திரப்பள்ளி'a என்பதும் மகேந்திரன்தொடர்புடைய கோயிலாகத் தெரிகிறது. அதனையும் அப்பர் பாடவில்லை; சம்பந்தரே பாடியுள்ளார். அதற்கு அண்மையில் உள்ள நல்லூர்ப் பெருமணத்தையும் சம்பந்தரே பாடியுள்ளார். இவற்றையும், மகேந்திரனுக்கு முற்பட்ட பல்லவர் தமிழகத்திற் சிவன் கோயில் கட்டினமைக்குச் சான்றின்மையையும் நோக்க, பல்லவன் ஈச்சுவரமும் மயேந்திரப்பள்ளியும் மகேந்திரன் காலத்திற் கட்டப்பட்டவை எனக் கருதுதல் பொருந்தும்.

நரசிம்மவர்மன் : இவன் வைணவன். இவன் இரண்டாம் புலிகேசியை வென்று வாதாபியைக் கைப்பற்றியவன்; மஹாமல்லன் என்று பெயர்பெற்றவன். பெரும்பாண் ஆற்றுப்படையில், பட்டினம்" எனப் பெயர் பெற்றிருந்தது, இவன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு மஹாமல்லபுரம் அல்லது மாமல்லபுரம் என்று பெயர் பெற்றது." இவன் மாமல்லபுரத்தில் ஒற்றைக் கல் கோயில்களை (இக்கால ரதங்களை)