பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி * 33

அமைக்கத் தொடங்கியவன். இன்று அர்ச்சுனன் ரதம், தர்மராசர் ரதம் என்பன சிவன் கோயில்களே.'திருக்கழுக்குன்றம் சிவன்கோயிலுக்குக் கந்தசிஷ்யன் செய்ததானத்தை இவன் புதுப்பித்தவன்."

பரமேசுவரவர்மன் : மாமல்லபுரத்தில் உள்ள தர்மராசர் ரதம், கணேச மண்டபம், இராமநுக மண்டபம் என்பன அத்யந்தகாம பல்லவேசுவரம் எனக் கல்வெட்டில் இருத்தலால், இவன் காலத்தில் முடிவுற்றன என்பது தெரிகிறது. இவை மூன்றும் சிவன் கோயில்களே." இவன் தன் விருதுப் பெயர்களுள் ஒன்றான வித்யாவிநீதன் என்னும் பெயரால் கூரத்தில் ஒரு சிவன் கோயிலைக் கட்டினான்; அக் கோயில் கூரைபோட ஓடுகள் செய்து சூளை போடுவித்தான்; மண்டபம் கட்டினான், மண்டபத்தில் பாரதம் படித்து மக்களுக்குக் கூற ஏற்பாடு செய்தான்; பூசை செய்ய அனந்த சிவாசாரியார் என்பவனை நியமித்தான்; 20 சதுர்வேதிகட்கு நிலம் அளித்தான். அவ்வூரில் முன்னரே 108 சதுர் வேதிகள் இருந்தனர்." அக் கூரம் கோயில் இன்று பாழ்பட்டுக் கிடக்கிறது. இதன் அடிப்படையில் கற்பலகைகள் காண்கின்றன. அவற்றுக்குமேல் செங்கற்சுவர்; ஒட்டுக் கூரை. கற்களை உடைத்துப் பாறைகளாக்கி ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோயில் கட்ட முயன்ற முதல் பல்லவன் இராசசிம்மன் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆனால் அந்த எண்ணத்தை அவனுக்கு உண்டாக்கியது, அவன் தந்தை கட்டிய கூரம் சிவன் கோயிலேயாகும். பரமேசுவரன் காலத்தில் கற்கள் பெரிய கற்பலகைகள் போலச் செய்யப்பட்டுக் கோயில் அடிப்பகுதிக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.அவன் மகனான இராசசிம்மன் காலத்தில் கற்பலகைகள் இன்றிப் பெரிய கல்துண்டங்கள் போலச் செய்யப்பட்டுக் கோவில் முழுவதற்குமே பயன் படுத்தப்பட்டன. கூரம் கோயிலை நன்கு கவனியாத காரணத்தாலோ என்னவோ, ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கவனித்து எழுதத் தவறிவிட்டனர்.

'சிவனுக்கு மேல் தெய்வம் இல்லை. அவனே முழு முதற் கடவுள்; பிறப்பிலி, பூரீநிதி சிவனை உள்ளன்புடன் வழிபடுபவன்; சிவனை நினையாதவர் ஆறுமுறை சபிக்கப்பட்டவராவர்.' இவை மாமல்லபுரத்துக் கணேசர் கோயிலில் உள்ள பரமேசுவரன் கல்வெட்டு வாக்கியங்கள். இவற்றிலிருந்து பரமேசுவரனது சமயப் பற்றையும் சிவனைப் பற்றிய அவனது கருத்தையும் நன்கறியலாம். “பூரீநிதி பிறப்பற்ற சிவனைத் தன் முடிமீது தாங்கியுள்ளான். புகழ்பெற்ற அத்யந்த காமனது மணி முடியைச் சிவன் இருப்பிடமாகக் கொண்டிருக்கிறான்.' சிவன் தன் முடிமீது இருப்பதாகத் தெரிவிக்கும்