பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி འདཧྲུའུ 35

சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. கணங்கள் பலவகை இசைக் கருவிகளை வைத்துள்ளன. சிவன், நடராஜன் அல்லது நிருத்த மூர்த்தி என்பதை விளக்கவல்ல நடனவகைகள் பல கயிலாசாநாதர் கோயிலில் இருக்கின்றன. இராசசிம்மன் காஞ்சியிற் கட்டிய மதங்கீசர்கோயிலிலும், ஐராவதேசுவரர் கோயிலிலும் இத்தகைய நடனச் சிற்பங்களைக் காணலாம்.' இந் நடன வகைகளைப் பற்றிய விளக்கம் அறிஞர் நூல்களிற் காணலாம்.".

இராசசிம்மன் சிறந்த போர்வீரன்; இசைக் கருவிகளை மீட்டுவதில் வித்யாதரனை ஒத்தவன். இசை, நடனக் கலைகளில் வல்லவன், செய்யுளை உயிர்ப்பித்தவன் என்று இவனுடைய கயிலாசநாதர் கோயில் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அவை இவனைச் "சிவசூடாமணி, சங்கரபக்தன், ஆகமப்பிரியன், சிவனையே அடைக்கலமாகக் கொண்டவன், ரிஷபலாஞ்சனன், சைவசித்தாந்தப்படி நடப்பவன், அதனையே ஆதாரமாகக் கொண்டவன், சிவனைத் தன் முடிமீது தரித்துள்ளவன்' என்று கூறுகின்றன. இவற்றால், இவன் சிறந்த சிவபக்தன் என்பதும், சைவசித்தாந்தத்தை நன்கு அறிந்தவன் என்பதும், தன் தந்தையைப் போலவே லிங்கத்தை முடியில் தரித்தவன் என்பதும் விளங்குகின்றன. இவன் "இக் கலியுகத்தில் அசரீரி கேட்டவன்" என்று கல்வெட்டுக் கூறுகிறது. இக் குறிப்புப் பூசலார் நாயனார் புராண வரலாற்றுடன் தொடர்புகொண்டதாகலாம் என்பது அறிஞர் கருத்து." பூசலார்வாழ்ந்த திருநின்றவூர் (திண்ணனூர்)ச் சிவன் கோயிலில் இராசசிம்மன் காலத்துத் தூண்கள் காண்கின்றன; பூசலார் உருவம், பல்லவன் உருவம் காண்கின்றன. அக்கோயில் இராசசிம்மன் காலத்தது என்று கூறுவதில் தவறில்லை. -

காடவ அரசன் காஞ்சியில் கற்றளி எடுத்துப் பக்கத்தில் எல்லாம் சிவனுக்குப் பெருஞ்செல்வம் அளித்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார்.’ இவ்வாறு காஞ்சியில் சிவனுக்குக் கற்றளி எடுத்தவன் இராசசிம்மனே என்பதை நாமறிவோம். இவன் அக் கோயிலுக்குப் பெருஞ்செல்வத்தை அளித்தது உண்மை என்பதைக் கயிலாசநாதர் கோயிலிலுள்ள இரண்டாம் விக்கிரமாதித்தன் (சாளுக்கியன்) கல்வெட்டும், அவனது கேந்தூர்ப் பட்டயமும், இரண்டாம் கீர்த்தி வர்மனது வக்கலேரிப் பட்டயமும் உணர்த்துகின்றன." இவ்வாறு சேக்கிழார் கூறியதைச் சாளுக்கியர் கூற்றுக்கள் மெய்ப்பித்தலைக் காண, பூசலார் இராசசிம்மன் காலத்தவர் என்பதை உறுதியாகக் கூறலாம். இவனுடைய கல்வெட்டுக்களில் வரும் சிவனைக் குறிக்கும்