பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - பிற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம் -1

பெயர்கள்; சங்கரன், அரன், சம்பு, பவன், பசுபதி, எண் கைப் பெரியோன், ஈசானன், காலகாலன், ஸ்தானு, தேவதேவன், ஈசுவரன் என்பன."

மகேந்திரன் III: இவன் இராசசிம்மன் மகன், கயிலாச நாதர் கோயிலில் ஒரு சிறிய சிவன் கோயிலைக் கட்டியவன். அதன் பெயர் மகேந்தரவர்மேசுவரம் என்பது. “சிவன் கடவுளருள் முதல்வன் தோல் ஆடையன், ஈசன், மகேசுவரன்; தன் கணங்களுடன் இக் கோயிலில் உறைவானாக,” என்பது அவன் கல்வெட்டு."

இராசசிம்மன் மனைவியான (அ) ரங்கபதாகை என்பவளும் ஒரு சிறிய சிவன் கோயிலைக் கயிலாசநாதர் கோயிலிற் கட்டினாள்.' இங்ங்ணம் கணவன்-மனைவி-மகன் ஆகிய மூவரும் சிறந்த சிவ பக்தர்களாக இருந்து சைவத்தை வளர்த்தனர் என்பதை நோக்க, அவர்கள் காலத்தில் நாட்டில் சைவசமயம் நன்கு வளர்நததென்பதை அறியலாம்.

இரண்டாம் பரமேசுவரன்: இவன் திருவதிகைச் சிவன் கோயிலைக் கற்றளியாக்கினன்,' அக் கோவிலுக்கு இவன் காலத்தில் திருப்பணிக்குப் பொன் அளிக்கப்பட்டது."

இரண்டாம் நந்திவர்மன்: இவன் வைணவன்; திருமங்கையாழ்வார் காலத்தவன்." காஞ்சியில் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டியவன்." சீயமங்கலத்து ஸ்தம்பேசுவரர் கோயில், தயாமுக மங்கலம் சிவன் கோயில், திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோயில், தளவானூர் குகைக் கோயில், காஞ்சி-முத்தீசுவரர் கோயில், திருவல்லம் சிவன் கோயில், மனலூர்ப் பேட்டை உழுதீசுவரர் கோயில் என்பன இவன் காலத்துக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன." இவற்றுள் சீயமங்கலம், தளவானுர்க் கோயில்கள் மகேந்திரவர்மன் குடைவித்தவை. அவை வழிபாட்டுக்குரிய கோயில்களாக இருந்தவை என்பது இக் கல்வெட்டுக்களால் தெரிகிறது. கோவலூர் வீரட்டம், திருவல்லம் என்பன அப்பர்- சம்பந்தராற் பாடப்பட்டவை. திருவல்லம் கோயில் இவன் காலத்திற் புதுப்பிக்கப்பட்டதை" நோக்க, அது மிகப் பழைய கோயில் என்பது தெரிகிறது.

காஞ்சி-முக்தீசுவரர் கோயில்

இவன் காலத்துச் சிவன் கோயில்களிற் குறிக்கத் தக்க சிறப்புடையது, காஞ்சிமுக்தீசுவரர் கோயில் ஆகும். இது இவன் காலத்தில் தர்மமஹாதேவீசுவரம் எனப்பட்டது. இக் கோயில்,