பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ....। பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் - !

விருதுப்பெயர் கொண்ட விளக்கு ஒன்றைத் திருவிடை மருதூர்ச் சிவனுக்களித்தான், திருவொற்றியூர்ச் சிவன் கோயிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான்." திருத்தவத்துறை மகாதேவர் கோயிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான்." திருக் கடைமுடி மகாதேவர்க்கு நில தானம் செய்தான்;' இவன் மனைவியருள் ஒருத்தியான மாறம்பாவையாலும் பிறராலும் இவனாட்சியில் அறங்கள் செய்யப் பெற்றவை, திருநெய்த்தானம், செந்தலை, திருவல்லம், திருக்கடைமுடி, திருப்பராய்த் துறை, குடிமல்லம், நியமம், வெண் குன்றம் என்ற இடத்துக் கோயில்கள் ஆகும்." குன்றாண்டார் கோயில் திரு ஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க ஒருவன் அரிசிதானம் செய்தான்." இவன் காலத்தில் திருவல்லம் கோயிலில் திருப்பதிகம் ஒதப்பட்டு வந்தது என்பது தெரிகிறது."

திருவல்லம் சிவன் கோயில் : இக் கோயிலில் பூசை செய்யச் சிவப்பிராமணர், பூரீபலி கொட்டுவார், கோயில் நந்தவனங்களிலிருந்து பூப்பறிப்பவர், திருப்பதியம் ஒதுவார், வேறு பல பணி செய்வாரும் இருந்தனர்."

மாறம்பாவையாரது கல்வெட்டில், திருக்கோவில் பணி செய்யும் மாணிகள் ஐவர் என்பது காண்கிறது. எனவே அவர்களும் தளிப் பரிவாரத்தில் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. அவர்கள் கோயிலை அடுத்திருந்த மடத்தில் சாத்திரங்களைக் கற்று வந்தவராகலாம்.

இந் நந்திவர்மன் செய்த திருப்பணிகள் இவன் சிறந்த சிவபக்தன் என்பதை உணர்த்துகின்றன. இவன் மனைவியான மாறம்பாவையும், இராசசிம்மன் மனைவியான ரங்கபதாகை போலச்சிவபக்தியுடையவள். இவன், 'சிவனை முழுதும் மறவாத சிந்தையன்' என்று நந்திக் கலம்பகம்" கூறுகிறது. அந் நூல் "பைந்தமிழை ஆய்கின்ற நந்தி" என்றும் கூறுகிறது. இவன் பெயரால் நந்திக்கலம்பகம் இருத்தலையும், பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனார் இவனைப் பாராட்டலையும் நோக்க, இவன் தமிழ் வளர்ச்சியில் நாட்டங் கொண்டிருந்தான் என்றும் கூறலாம்: - -

இவ்வறிஞனே,

கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் என்று சுந்தரரால் பாராட்டப்பட்டவன் என்று அறிஞர் தக்க பல - காரணங்களைக் கூறியுள்ளனர். அஃதாயின் கோயிலில் மாலை கட்டுவதற்னெ இருந்த மலரை ஆகமவிதிக்கு மாறாக முகந்த