பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఖి - 89

தவற்றுக்காகத் தன் பட்டத்தரசியை மூக்கரிந்த கடுஞ் சுத்த சைவன் இவனாதல் வேண்டும். இவனால் மூக்கறுபட்டவள் இராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகளான சங்காவாதல் வேண்டும். இவன் சுந்தரர் காலத்தவனாயின், சுந்தரர் காலத்தில் வாழ்ந்த மானக்கஞ்சாறரும் இக் காலத்தவரேயாவர். அவர் திருமுட்டம் சிவன் கோயிலில் திருப்பதியம் பாடிக்கொண்டிருந்து முத்திபெற்றார். அவரது உருவம் அக் கோவில் கோபுரத்தில் இருக்கிறது. இன்றைய நெல்லூர் மாவட்டம் - கூடுர்த்தாலுக்காவைச் சேர்ந்த மல்லம் என்னும் ஊர், இவன் காலத்தில் பையூர் இளங்கோட்டத்துத் திரு ஆன்பூர் எனப்பட்டது. அங்குச்சுப்பிரமணியர் கோயில் இருந்தது என்பதை ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது."

நிருபதுங்கவர்மன் : இவன் நந்திவர்மனுக்கும் சங்காவுக்கும் பிறந்தவன்; வைணவன், இவன் பாகூர் வடமொழிக் கல்லூரிக்கு மூன்று கிராமங்களைத் தானமாக வழங்கினான். இவன் காலத்தில் முத்தரையன் ஒருவன் நாரத்தா மலையில் சிவன் கோயிலைக் குடைவித்தான்." காடவன் மாதேவியார் என்பவள் திருவாலங்காட்டுக் கோயிலில் விளக்கெரிக்க 108 கழஞ்சு பொன் அளித்தாள்."பரமேசுவர மங்கலத்துச் சிவன் கோயில் பூசைக்காக 11 கழஞ்சு பொன் கணப்பெருமக்கள் வசம் தரப்பட்டது. திருக்கோவலூர் வீரட்டானேசர் கோயிலுக்கு விளக்கெரிக்க ஊராரிடம் (ஊரவையார்) 12கழஞ்சு பொன் ஒருவனால் தரப்பட்டது. மாறம்பாவையால் திருச்சன்னம்பூண்டிச் சிவன் கோயிலுக்குப் பொன் தரப்பட்டது. கண்டியூர், திருத்தவத்துறை, அதிகை, திருக்கோடிகா, திருப்புலிவலம் என்ற இடத்துக் கோயில்கட்குப் பொன் தரப்பட்டது." இவன் மனைவியருள் ஒருத்தியான வீரமஹாதேவி என்பவள் திருக்கோடிகாவில் உள்ள சிவன் கோயிலில் இரண்ய கர்ப்பம், துலாபாரம் புகுந்து, ஒரு பகுதிப் பொன்னை அப்பெருமானுக்கு அளித்தாள். அச்சிறுபாக்கம் சிவன் கோயிலுக்கு நிலதானம் செய்யப்பட்டது."

அபராசிதன் : இவன் காலத்தில் கட்டப்பட்டதே திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோயில். அதில் இவன் பாடியதாக ஒரு தமிழ் வெண்பா காண்கிறது. இவன் சிறந்த சிவ பக்தன், பெருமானடிகள் என்று வழங்கப்பட்டான்." அக்கற்கோயில் விமானம் தூங்கானை அமைப்புடையது. இவன் காலத்தில் மாங்காடு, திருவொற்றியூர், சத்தியவேடு என்னும் இடத்துக்கோயில்கள் சிறப்புற்றன."அபராசிதன் மனைவியான மாதேவடிகள் திருவொற்றியூர்க் கோயிலில் விளக்கெரிக்க 30 கழஞ்சு பொன்கொடுத்தாள்.'