பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பிற்காலப் பல்லவர் காலத்தில்

சைவசமயம்-II t

இலக்கியத்தில் சைவம் (கி.பி. 600-900)

இக்காலச் சைவ இலக்கியம்: மகேந்திரவர்மன் காலத்தவரான அப்பர் பாடிய திருமுறைகள் மூன்று, அவர் காலத்தவரான சம்பந்தர் பாடிய திருமுறைகள் மூன்று, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின ரான சுந்தரர் பாடிய திருமுறை ஒன்று, அவர் காலத்தவரான சேரமான் பெருமாள் நாயனார் பாடிய பொன்வண்ணத்து அந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞானவுலா என்பன. அதே நூற்றாண்டினரான மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக் கோவையார் என்பன இக்காலச் சைவ நூல்கள் ஆகும். இந்நூற்களில் கூறப்பட்டுள்ள பல தலங்களைப்பற்றியும் நாயன்மார்களைப் பற்றியும் அவர்கள் சைவம் வளர்த்த முறைபற்றியும் தம்காலத்திற் கிடைத்ததக்க சான்றுகள் கொண்டு சேக்கிழார் பெரிய புராணம் என்னும் நூலைப் பாடியுள்ளார். ஆதலின், அது பல்லவர்கால நிலையையே படம் பிடித்துக் காட்டுவது என்றே கொள்ளலாம். அந்தப் பெருநூலையும் இங்கு ஆதாரமாகக் கொள்வது பொருத்தமாகும். ..

இக்காலச் சிவத் தலங்கள்: அப்பர்-சம்பந்தர்-சுந்தரர் என்னும் மூவரும் தமிழ் நாட்டில் தம் காலத்திருந்த பல சிவன் கோயில்கட்கு நேராகச் சென்று பதிகம் பாடினர். அவர்கள் பாடிய பதிகங்களுள் அழிந்தன போக எஞ்சியவற்றை இன்றும் காணலாம். அவற்றுள் குறிக்கப்பட்டுள்ள கோயில்கள் ஏறத்தாழ 275. தனிப்பதிகம்பெறாமல் வைப்புத் தலங்களாகக் காணப்படுவன ஏறத்தாழ 50 என்னலாம். இத்தலங்களுள் தமிழகத்திற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் இருப்பவை, கேதாரம், ரீசைலம், இலங்கையில் உள்ள கேதீச்சரம் முதலிய சிலவாகும்.

சிலப்பதிகார காலத்தில் (கி.பி.2-ஆம் நூற்றாண்டில்) பாண்டி நாட்டுக்குச் செல்லதக்க வழி ஒழுங்கற்றது, ஆபத்தானது என்று கோவலற்குக் கவுந்தியடிகள் கூறியதைக் காணலாம். ஆனால் அப்பர்-சம்பந்தர் காலத்தில் வழி செவ்வையாக இருந்ததையும் வழி