பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நின்கின்ற அருளும் தோன்றும். ' என்று அப்பர் பெருமானின் திருத்தாண்டகப் பகுதியும் அரண் செய்வதைக் காணலாம். இவையெல்லாம் எண்ணற்ற தேவர்களின் நிலைகளும் சம்பு பட்சத்திலும் உள்ளன என்பதனையே விளக்கி நிற்பனவாக அமைந்துள்ளது. இவ்வாறின்றி அனுபட்சத்தையே குறிப்பனவற்றையும் காண்போம். - நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறுகோடி நாராயணர் அங்ங்னே எறு கங்கை மணல்எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே." என்ற அப்பர் பெருமானின் திருவாக்கில் அயன்மால், இந்திரன் ஆகிய மூவரே சுட்டப் பெற்று சிவபிரானின் குறிப்பு இல்லாமையால் அனுபட்சத்தையே குறிப்பனவாக இருத்தல் தெளிவாகின்றதன்றோ? வாதவூரடிகளின், வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான்.? - - என்ற திருவாக்கினாலும் இவ்வுண்மையைத் தெளியலாம். (10) சம்புபட்ச அனுபட்ச விளக்கங்கள்" புண்ணிய விசேடத்தால் உலகத்தைத் தொழிற்படுத்தும் தலைமைப்பாட்டினை எய்தும் அணுக்களும்-அஃதாவது 67. அப். தேவா 6.18:11 68. மேலது 5.100.3 69. திருவா. திருவம். 4 70. இப்பகுதியில் மிகவும் ஆழங்கால்பட்டுக் கருத்துகள் மனத்தில் இருத்தப்பெறல் வேண்டியவை. -