பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் ! (பதி) 89 களின் இயல்பை விரித்துக் கூறுமிடத்து இனிது விளக்கம் எயதும். - சிவபெருமானுக்குக்கீழ் செயலாற்றும் அயன், அரி, அரன்’ என்னும் காரணக் கடவுளர்க்கெல்லாம் வடிவம் தொழிலுமாக ஆகமங்கள் புராணங்கள், இதிகாசங்கள் இவற்றில் கூறப்பெற்றுள்ளன; இவர்களுக்குள்ளே அமைந்த வேறுபாடுகளையும் ஆங்குக் காணலாம். மாக்டை உலகில் நிற்பினும் மக்கள் போலன்றி பொதுச் சிவபுண்ணியத்தால்' ஏதோ ஒரோ வழித்துய உலகில் அரிதிற் சென்று இறைவனின் உண்மைத் திருமேனியை அரிதிற் கண்டு திரும்பக் கூடுபவர் கள் தேவர்கள் இவர்களுள்ளும் மேற்கூறியவற்றைச் சிறிது எளிதிற் பெறக் கூடியவர்கள் இந்திரன் முதலிய இறையவர் கள். இவ்விருவகைத் தேவர்கள் போலன்றி தமது உண்மைச் சிவபண்ணியத்தால் தூய உலகத்தைப் பெற்று இறைவனை உண்மைத் திருமேனியில் எளிதிற் கண்டு வாழ்வோர் உருத்திரர்களாவர். மற்றும் தேவரும் திசைக்காவலரும், அயன், மால்' என்னும் காரணக் கடவுளரும் இறைவனை ஏதோ ஒருகால் காணப்பெற்றாராயினும், தம் உடம்பு, தாம் இருக்கும் உலகு, முதலியவற்றின் சார்பால் பலகாறும் அவனை மறப்பர். தம் தொழிலுக்குத் தம்மையே முதல்வராகவும் கருதி மயங்குவர். அம்மயக்கம் காரணமாக அத்தொழில் நிகழுங்கால் சிலசமயம் மகிழ்ச்சியும் சிலசமயம் வாட்டமும் உற்றுத் தொடங்குவர். தம்தம் பதவிகளின் உயர்வு தாழ்வுகளில் விருப்பு வெறுப்பு களில் பொருந்துதலும் உடையர். உருத்திரர் நிலையோ 71. மனம் மொழி மெய்களால் சிவபிரானை நோக்கிச் செய்யப் பெறும் நற்செயல்கள் யாவும் சிவபுண்ணியங்களாகும். இவை பதிபுண்ணியங்கள் எனவும் வழங்கப்பெறும்.