பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் முற்றிலும் வேறு. இவர்தம் உடம்பு, இவர்கள் வாழும் உலகு முதலியவற்றின் சார்பால் இறைவனை யாண்டும் மறவாதும், தம்தம் தொழில் நிகழ்ச்சிகளில் தொடக்குறாதும் நிற்பர். எனினும், தம்தம் பதவியது உயர்வு தாழ்வுகளில் விருப்பு வெறுப்புகளை முற்றும் நீங்குவாரல்லர். தேவரின் மேம்பட்ட இந்திரன் முதலிய இறையவர்போல், இவ்வுருத்திரரின் மேம்பட்டோர் அனந்தர் முதலிய வித்தியேசுவரர் என்பது ஈண்டு அறிந்து துணியப்பெறும். தேவர்கள் மூலப்பகுதிக்குமேல் செல்லமாட்டாதவர்கள். இறைவனின் ஆணை உள்ளபொழுது சிறிது காலம் சுத்த வித்தையில் சென்று கடிதின் தம்மிடத்திற்கு மீளுதல் உடைய வர். உருத்திரரோ அவ்வாறின்றிச் சுத்தவித்தையிலே வாழ் பவர்கள். ஆயினும், இவர்கள் அதற்குமேல் செல்லமாட்டாத வர்கள். இறைவனின் ஆணை உள்ள பொழுது ஈசுர தத்துவத் திற்குச் சென்று மீண்டும் சுத்தவித்தையை அடைவர். வித்தி யேசுவரர் ஈசுரதத்துவத்திலேயே வாழ்பவர்கள். மேன்மேல் உள்ளவர்கள் யாவருமே கீழ்கீழ் உலகுகளில் சென்று மீளும் உரிமை பெற்றவர்கள். கீழ்கீழ் உள்ளவர்கள் அவ்வாறின்றி மேலுள்ளவர் ஆணையின்றித் தாமே மேற்செல்லும் உரிமை உடையவரல்லர். இந்த விவரங்கள் தெளிவாக அறியப்பெறுதல் வேண்டும். - ஒரு முக்கிய செய்தி. ஈசுரதத்துவத்தில் மகேசுரனாய் நின்று அனந்தர் முதலியோரைச் சுத்தவித்தையில் செலுத்தி ஆள்கின்ற இறைவனும், சுத்தவித்தையில் உருத்திரனாய் நின்று உருத்திரர்கட்கு எளிதிலும், மால் அயன் முதலியோ ருக்கு அரிதிலும் காட்சியளித்து அவர்கட்க வேண்டுவன