பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) - 9] அவனது வடிவும் பெயரும் வேறுபட்டு நிற்கும் என்பதை உளங்கொள்ளுதல் வேண்டும். கறைமிடறு உடைமையும் அஃது இன்மையுமே உருத்திரவடிவத்திற்கும் மகேசுர வடிவத்திற்கும் உள்ள வேறுபாடாகும். கறைமிடறு நஞ்சுடை மையை உணர்த்துவது, அது மாசுடை உலகத்தார்க்கு அம்மாசு நீக்கி ஆளுதலுடைமையைக் குறிக்கும் சிறப்படையாளமாகும். ஆகையால் உருத்திரனாய் நிற்கும் இறைவன் சீகண்டபரம சிவன் என வழங்கப்பெறுகின்றான் என்பது அறியப்படும். சீகண்ட பரமசிவனை யோகத்தால் வழிபட்டோர் அவனது உருவத்தையும் பெயரையும் பெறுவர்; இவர்கள் சீகண்டருத்திரர் என வழங்கப்பெறுவர். ஆயினும் அவர்கட் குப் பரமசிவன் என்ற பெயர் வழங்குதல் இல்லை. ஆகவே பரமசிவனாகிய சீகண்டருத்திரன் இறைவன் ஆகின்றான். சாரூபநிலையினால் அவனது உருவும் பெற்ற சீகண்ட ருத்திரர்கள் உயிரினத்தவர்கள் ஆகின்றனர். ஆகவே, மாசடை உலகத்தில் முக்தி அடையும் நிலையிலிருப்போர்க்கு யாண்டும் முக்தியை அருளுபவன் சீகண்ட பரமசிவனே யாவான். ஏனைய பயன்களை அடைய விரும்புவோர்க்கு சீகண்ட பரமசிவனேயாதல், சீண்ட ருத்திரர்களேயாதல் ஏற்றபெற்றியான் முன்னின்று அருளுபவர் என்பது அறிந்து தெளியப்பெறும். சீகண்டருத்திரர் அந்நிலையின் நீங்கி மேல் நிைையை அடைதலும் உண்டு என்பதை நாம் அறிவோமாத லின் அவர்கள் என்றும் ஒருவரே ஆகார் என்பதும் உணரப் படும். - - எல்லையின்றிப் பெரிதாய் நிற்கும் தூய உலகத்தின் ஒருபகுதியே மாசுடை உலகம் என்பதை நாம் அறிவோம். 72. சாரூபம் - நெருங்கி அளவளாவும் உரிமையைப் பெற்றிருக் - கும் நிலை