பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்-1 (பதி) 95 திருஞான சம்பந்தரை முருகக் கடவுளே என்று கருதுவோரும் உளர். இங்ங்ணம் கருதினால் அவர் உருத்திரரா கின்றார். முருகக் கடவுளைச் சிவர் என்று கருதினால் ஞானசம்பந்தர் உருத்திரர்களுள் ஒருவரது அவதாரத்தினர் ஆகின்றார். இங்ங்னம் இருதிறக் கொள்கைகள் சித்தாந்தத்தில் இருத்தல் பற்றியே சேக்கிழார் பெருமான், பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர் தமைப்பரமர் பண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருள' என்று ஞானசம்பந்தப் பெருமானைப் பொதுப்பட அருளிச் செய்திருத்தல் சிந்தித்தற்குரியது. இன்னொரு கருத்து: உருத்திரசன்மராயும் ஞான சம்பந்தராயும் பிறந்தவர்கள் பிறப்பிறப்பற்ற முழுமுதற் கடவுளாகிய முருகப்பெருமானை வழிபட்டு அவரது உலகினை அடைந்த அமரசுப்பிரமணியர்கள் ஆயினர் என்று கருதுவோரும் உளர். இம்முருகக் கடவுள் சம்புபட்சமாகிய முருகக் கடவுள் அன்றி வேறொருவர் அல்லர். அவரைச் சிவ பெருமானுக்கு வேறாகக் கருதினால் அவர் அபரமுத்தராகிய சிவராகின்றார். ஆகவே, முருகப் பெருமானைச் சிவபெருமா னுக்கு வேறல்லாதவராகக் கருதியும், அவரை வேறானவராகக் கருதியும் வழிபட்டு அமரசுப்பிரமணியராவோர் பிறப்பற்ற நிலையை அடையின் அவர் அபரமுத்தராகிய சிவர் ஆகின் றார். பிறவியுறும் நிலையில் இருப்பின் அவர் இடைநிலையில் இருக்கும் உருத்திரராகின்றார். இக்கருத்தினையும் உளங்கொள் ளல் வேண்டும். இங்ங்னமே வைரவர், வீரபத்திரர் முதலியோ ரின் நிலைகளும் அமையும் என்பதும் தெரிந்து தெளியப்படும். 75. பெ. புரா. திருஞான. 55