பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 99 பொருண்மையே ஆற்றலாக மாறுகின்றது என்பது ஐன்ஸ் டைன் உணர்த்திய உண்மை. இவ்வாறு முதலுக்கும் அதன் பெற்றிக்கும் உள்ள பான்மை இயல்பைத் தமிழில் தற்கிழமை என்றும் வடமொழியில் சமவயம், தாதான்மியம் என்றும் வழங்கப் பெறுகின்றன. சிவன் ஒன்றேயாக அதன் சக்தி பலவாகச் செயற்படுகின்றது என்பது முன்னரும் விளக்கப் பெற்றுள்ளது.” ஒருவனாகிய இறைவன் பலவாய்ப் பரந்த எல்லா உலகு உயிர்களோடும் கலந்து நிற்கின்றான் என்பதை, நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோனோக்கம் ஆடாமோ!' என்று மணிவாசகப் பெருமானும் விளக்கியுள்ளதைக் கண்டு தெளியலாம். இதுதான் அவனது வியத்தகு சக்தி. சாதாரண மக்கட்கு விளங்காப் புதிர். ஒருவனாய் இருக்கும் இறைவன், பலபொருள்களிலும் நிறைந்து நிற்றற்குக் கதிரவன் - கதிர், விளக்கு - ஒளி என்ற எடுத்துக்காட்டுகளால் விளக்கின மையை ஈண்டு நினைவு கூரலாம். பல்பொருள் சக்திகளைத் தொகுத்துக் கூறி விளக்கினால் மேலும் தெளிவு பிறக்கும். இனி பொருள் என்று சொல்லப் பெறுவன யாவும் தத்தம் அளவிற்குச் சக்திகளையுடையவை. நியூட்டனின் விதிகளாலும் இதனை அறிந்து தெளியலாம். ஐம்பெரும் பூதங்களுள் ஆகாயமே பெரியது; ஏனைய பூதங்களின் சக்தியைவிட இதன் சக்தி பெரியது. ஏனையவை யாவும் இதனுள் அடங்கி நிற்கின்றன. ஏனைய பூதங்கள் உள்ள இடங்களில் ஆகாயம் உள்ளது; ஆகாயம் உள்ள 78. இந்நூல் பக் 49.51 79. திருவா. திருத்தோனோக்கம் - 5