பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {}{} சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இடங்களிலெல்லாம் ஏனைய பூதங்கள் இல்லை' - என்பதைச் சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிலும் மிகப் பெரிய பொருளாகிய (பிரம்மம் என்ற வடசொல்லின் பொருளும் இது தான்) இறைவனது சக்தியை ஆகாயத்தோடு ஒப்புமைப்படுத்தி வழங்குவர் நம் நாட்டு ஞானச் செல்வர்கள். "தன்னருள் வெளிக்குளே, அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கு இச்சை வைத்து" என்று தாயுமான அடிகளும் சிவத்தின் சொரூப இலக்கணத்தைக் கூறுவதனால் இது தெளிவாகின்றது. ஆகாரபுவனத்தை அருள் வெளி என்று அடிகள் கூறியுள்ள நுட்பத்தை உணர்ந்து மகிழலாம். மேலும் அந்த ஞானச் செல்வர் பதியையே சுகாரம்பப் பெருவெளி, சித்தாந்தப் பேரொளி, தீதில் பொருள், பூரண ஆனந்தப் பொருள்', 'பெரிய பொருள் (பிரம்மம் என்பதன் தமிழாக் கம் என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பதையும் காணலாம்.' பொருள் வணக்கம் என்ற பகுதியில் உள்ள 12 திருப்பாடல் களும் இறைவனின் சொரூபநிலையைப் பளிங்கெனப் பகர்ந்து விளக்கியிருப்பதை உணர்ந்து தெளியலாம். பூதம் முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியங்களா கிய உலகங்களும் மாயை' என்ற ஒரு பொருளாகும். இதனால் மாயை மிகப் பெரிய சக்தி என்பது தெளிவாகும். கன்மம்' என்பது இவ்வுலகங்களில் எங்கும் நடைபெறும் எல்லாச் செயல்களிலும் உண்டாகி எங்குச் செல்லினும் அங்கு வந்து பயன் கொடுக்கக் கூடியதாக இருப்பதால் மாயையின் சக்தியளவிற்குக் கன்மத்தின் சக்தியும் நிறைந்து நிற்றல் விளங்கும் ஆணவம் என்ற மூல மலத்தின் சக்தி அளவில் லாதனவாகிய அனைத்து உயிர்களையும் மறைத்து நிற்பதால் 80. தா.பா. பரசிவ வணக்கம் -1 81. மேலது பொருள் வணக்கம் - 1