பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) # 0 | உயிரின் (சித்தின் ஆற்றலளவிற்கு ஆணவத்தின் சக்தியும் நிறைந்துள்ளமை புலனாகும். ஆணவம், கன்மம், மாயை' என்னும் பாசங்களின் சக்தியாவும் சடசக்திகளாகும். இறைவனுடைய சக்தி சிற்சக்தி: அறிவு வடிவமாய்த் திகழும் சக்தி. தாயுமான அடிகளும் 'சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே' என்று இதனைக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். பதி பசு பாசம் என்ற மூன்று பொருள்களில் சக்திகளின் பாசத்தின் சக்தி சடசக்தி அறிவற்ற சக்தி, பதி, பசு ஆகிய வற்றின் சக்திகளிலும் பசுவின் சக்தி துல சக்தி இதனைச் சிற்றறிவு என வழங்கலாம். அதாவது பசுவின் அறிவு அஃது அடையும் பொருளின் தன்மையால் மாறிவிடும் தன்மையை யும் உடையது. இதனைச் சித்தாந்தம் சார்ந்ததன் வண்ண மாதல்’ என்று பேசும். "நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும்” என்ற உவமையால் வள்ளுவரும் விளக்கிப் போந்தார். இச்சிற் றறிவு-பசுவின் அறிவு-பாசத்தால் மறைக்கக் கூடியதாகின்றது. பதியின் அறிவு இதற்கு நேர்மாறானது; அது தன்னை அடைந்த பொருள்களையெல்லாம் தன் வண்ணமாகச் செய்து விடும் தன்மையது. இது தன்னை அறிவிப்பதற்கும் பிறிதொரு பொருளை வேண்டாதது தானே அறிவதன்றியும் பிறிதொன் றினை அறிவிக்கவும் வல்லது. இதுபற்றியே இது சூக்கும சித்து என்றும் பேரறிவு என்றும் வழங்கப் பெறுகின்றது. இத்தன்மைகளால் பதியின் அறிவு பாசத்தால் மறைக்கப் பெறும் தன்மையற்றதாகி விடுகின்றது. இத்தகைய நுண்ணிய பேரறிவாகிய சிற்சக்தியினால்தான் இறைவன் "பார்க்குமிடம் 82. மேலது. தேசோமயானந்தம் பாடல்களைக் காண்க.