பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {}2 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமாகித்” திகழ்கின்றான். ஏனைய பொருள்கள் ஒவ்வோர் அளவில் நிற்பினும் அவை முழுநிறைவை-பரிபூரணத் ജ്ഞഥങ്ങുபெற்றவை அல்ல. இறைவனாகிய முதற் பொருள் ஒன்றே பரிபூரணத்துவம் பெற்றுள்ளான் என்பது அறிந்து தெளியப்படும். பாரதியாரும், 'பரிபூரணனுக் கேஅடிமை செய்து வாழ்வோம்'." என்று சுதந்திரப் பள்ளுவை முடிக்கும் இறுதியடியிலுள்ள 'பரிபூரணன் என்ற சொல் இறைவன் ஒருவனையே முழுநிறைவுப் பொருள் என்று குறிப்பிடுவதாகக் கருதலாம். 'பரிபூரணத்துவம்’ என்பதுபற்றிச் சில சொற்கள். "பூரணத்துவம் என்பது பிறபொருளின் இன்மையன்று; பிறபொருள்களும் இருக்க, அவற்றின் சக்தியிலே தனது சக்தி உடலில் உயிர்போலக் கலந்து நிற்பதே பூரணத்துவம் ஆகும். இவ்வாறு எல்லாப் பொருள்களிலும் இறைவன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையையே. - பண்ணின் ஒசை பழத்தின் இன்சுவை' என்று பேசுவர் 'ஆளுடைய அடிகள். மெய்கண்டாரும், பண்ணையும் ஒசையும் போலப் பழமதுவும் எண்ணும் சுவையும்போல் எங்குமாம் அண்ணல்தான்' என்று கூறுவர். இதுவே அத்துவிதம் ஆகும் என்பதையும் அறிந்து தெளியலாம். எனவே சக்தியும் சிவமும் ஒன்றென்பது உறுதிப்படுகின்றது. 83. தா.பா. பரிபூரணானந்தம் - பாடல்கள் தோறும் இச்சொற்றொடரைக் காணலாம். 84. தே.கீ. சுதந்திரப் பள்ளு - 5 85. அப். தேவா. 5.47:8 86. சி.ஞா.போ. சூத். 2 அதிகர - 1