பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}6 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் உணராத பொருள்சத் தென்னின் ஒருபயன் இல்லை; தானும் புணராது; நாமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும்; தனவாத கருமம் ஒன்றும் . தருவதும் இல்லை; வானத் திணரார்பூந் தொடையும் யாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும்" என்பது சிவஞான சித்தியாரின் திருமொழி. இங்ங்னமே இறை வன் ஒரு காலத்தும் ஒருவராலும் அகப்படான் என்றிருக்கு மாயின் அவன் உளன் என்பதும், அவனால் பயன் பெறுதலும் இல்லையாய் முடியும். ஆகவே, அவன் ஒருவகையில் அறியப்படுபவனேயாவன். அஃதாவது இறைவனது அருளையே தம் அறிவுக்குப் பற்றுக்கோடாகக் கொண்டு அறிதல்ாகும். இதுவே பதிஞானம் எனப்படும். பதி ஞானம்-விளக்கம்: உயிர் தான் அறிவுடைய பொருள் என்பதை அறிந்தவுடன், தானே அறிவாய் இல்லாது, அறிவிப்பதொரு பொருளால் அறியும் அறிவாய் இருத்தலை உணரும். அவ்வகையில் உயிர் கண் முதலிய புறக்கருவிக ளும், மனம் முதலிய அகக் கருவிகளும் முடவனுக்குக் கோல்போல் நின்று உதவுவதனால் அறிந்து வருதல் கண்கூடு. ஆனால், அக்கருவிகள் தாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கிய பின்னர் உயிர் தன்னைத்தான் அறிகின்ற நிலை உண்டாகின்றது. இந்நிலையில் கருவிகள் இல்லையாய் நீங்கு கின்றன. இந்நிலையில் உயிருக்கு ஓர் அறிவு உண்டாகின்றது. இஃது எங்ங்னம் என ஊன்றி நோக்கினால் தன் அறிவுக்கு அறிவாய் நிற்கும் பதிப் பொருளினது அறிவு புலனாவதாகும். இதுவே பதிஞானம் என வழங்கப்படுவது. ஒருவாறு 89. சித்தியார் 6.4