பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 109 எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத்துன்னை வைத்தாய்? என்று நம்பியாரூரரும் நவின்றுள்ளதைக் காணலாம். வாத வூரடிகளும், இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்' என்று திருவாய் மலர்ந்துள்ளமையும் கண்டு தெளியலாம். இங்ங்ணம் அநுபூதிமான்களின் அநுபவ உரைகள் அளவில வாய்த் தோன்றி நின்று ஆண்டவன் அநுபவப் பொருளாய் நிற்றலை அரண் செய்கின்றன. இவை யாவும் பதிஞானத்தால் விளைந்த அநுபவங்களேயாகும் என்பதையும் உணர்ந்து தெளியப்படும். இந்த உணர்வைச் சிந்தாந்திகள் பாரிசேடப் பிரமாணம்’ (ஒழிபு அளவை) என்று பகர்வர். பாசத்திற் கட்டுப்பட்ட உயிர்களின் அறிவும் அவற்றின் கருவிகரணங்களுமே பசு ஞானம் என்றும், பசுகரணம் என்றும் பெரியோர்கள் பணிப்பர். அன்றியும், பாசத்தினின்றும் விடுபட்ட சீவன் முத்தர்களாகிய பெரியோர்களின் அறிவும் கருவிகரணங்களும் சிவபோகமாயும் சிவகரணமாயும் நிற்கும் என்றும் அவர்கள் பகர்வர். இதனை விளக்க வேண்டும். பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஒளிவீசுகின்றதை நாம் அறிவோம். இங்ங்ணம் ஒளிவீசுவது எது? இரும்பா? நெருப்பா? இதனை ஊன்றி நோக்கின் ஒளி வீசுவது நெருப்பு என்பது தெளிவாகும். 97. சுந்தரர் தேவா. 7.1:1 98. திருவா. கோயில் திருப்பதிகம் - 7 99. மூவர் உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு செய்யப்படின், இருவர் கள்வர் அல்லர் என்பது தெளியப்பெற்றால், மற்றொருவனே கள்வன் எனத் துணிதல் போல்வது.