பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் அதுபோல, சிவத்தைச் சார்ந்த உயிரும் அதன் கருவிகரணங் களும் இறைவனை அறிகின்றன என்று நுவலும்போது அந்த அறிவு இறைவனது அறிவு என்பது விளங்கும். ஆகவே, இறைவன் தன்னாலேதான் அறியப்படுபவன் அல்லது பிறவற்றால் அறியப்படுதல் எக்காலத்தும் இல்லை என்பது அறியப்படும். மேலும், சிவம் ஒரு தன்மையுடையதன்றி, கதிரவனும் கதிரும் போல, தானும் தன் சக்தியும் என இருதன்மையுடைய தாய் நிற்கும் என்பதை முன்னர் பல இடங்களில் விளக்கியதை நினைவுகூரவேண்டும். கண் கதிரவனை நோக்க வேண்டு மாயின் அவனது ஒளியாகிய கதிர்களின் வழியேதான் நோக்க வேண்டும். அதுபோலவே, உயிர் சிவத்தை அடைய வேண்டுமாயின் அஃது அவனது சக்தி வழியேதான் அடைய வேண்டும் அந்தச் சக்திதான் அருள்; அதனால்தான் சக்தி வழி அவனை அடைதலையே முன்னோர்கள் அவன் அருளே கண்ணாகக் காணுதல்’ என்றும், அவனருளாலே அவன் தாள் வணங்கி என்றும் அருளிச் செய்துள்ளனர் என்பதும் அறிந்து தெளிப்படும். (4) பதி சச்சிதானந்தம்-விளக்கம் இறைவனது உண்மை இயல்பை, சொரூப இலக்க ணத்தை- உபநிடதங்கள் சத்து, சித்து, ஆனந்தம் என்று மூன்று தன்மைகளாக அடக்கிப் பேசும். இவற்றுள் சத்து என்பதற்கு உண்மை என்பது பொருள். உண்மை என்பது உளவாந்தன்மை என்றும், எல்லாம் பொருள்களும் உள்ளன வன்றி இல்லாதது ஒன்றும் இல்லையாதலின்- அஃதாவது 'இல்லது வாராது உள்ளது போகாது என்ற சற்காரிய வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சைவசித்தாந்தமாதலின்