பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{4 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மூன்று சொற்களும் (சத்துச்சித்து+ஆனந்தம்) ஒன்றாகச் சேரும் பொழுது சச்சிதானந்தம்' ஆகின்றன. இதனால் இறைவனும் "சச்சிதானந்தம் என்றும் வழங்கப் பெறுகின்றான் என்பது அறிந்து தெளியப்படும். உபநிடதங்களில் சத்து, சித்து, ஆனந்தம் என மூன்றாகச் ‘சுருங்கக் கூறுவதை சைவ ஆகமங்கள் ஆறாகவும் எட்டாகவும் விரித்துக் கூறும். ஆறாகக் கூறப்பெறுவன" தன்வயம், முற்றும் உணர் தல், இயற்கை உணர்வு, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம் என்பன. இவற்றுள் தன்வயம் சத்தென்பதைக் கூறுவ தாகும். வரம்பிலின்பம் என்பது ஆனந்தத்தைக் கூறுவதாகும். ஏனைய நான்கும் சித்து என்பதை விரித்துக் கூறுவனவாகும். ஆறு குணங்களையுடையவன் (ஷாட்குண்யன்) என்று கூறப்பெறுவதையும் தெளியலாம். இனி, எட்டு எனப்படுவன: மேற்கூறியவற்றுடன் தூய்மை, இயல்பாகவே பாசங்கள் இன்மை என்னும் இரண்டும் கூட்டிச் சொல்லப்படுவனவாம். இவை இரண்டும் சத்து என்பதன் விரிவாகும். பாசத்தால் பற்றப்படாது தூயதாய் நிற்றல் நிலைபேறுடைய தன்மையினால் ஆவதாதலின் அவை ‘சத்து’ என்பதனுள் அடங்குவனவாயின என்பது அறியப் படும். இங்ங்ணம் எண்குணங்களும் மூன்றில் அடங்குதல் தெளியப்படும். திருவள்ளுவரும் இறைவன் எட்டு குணங்களை யுடையவன் எனபதை, கோளில் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" 107. குறள் - 9