பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 115 என்ற குறளில் குறித்துள்ளார். திருமுறைகளிலும் இறைவன் எட்டுக்குணங்களையுடையவனாகப் பேசப் பெறுகின்றான். எட்டுவான் குணத்தீசன் எம்மான் தன்னை" எட்டுக் கொலாம்அவர் ஈறில் பெருங்குணத்தான்" என்று நாவுக்கரசரும், இரும்புயர்த்த மூவிலைய சூலத்தினானை - இறையவனை மறையவனை எண்குணத்தினானை" என்று நம்பியாரூரரும் கூறுவதால் இதனை அறியலாம். இன்னும் பதியினது தன்னியல்பை இந்தப் பகுதியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பல்கலை ஆகமவேதம்’ (சிவப் பிரகாசம்-5) என்ற திருப்பாடலில் கூறுவன பலவும் மூன்று, ஆறு, எட்டு என்பவற்றின் விரிவேயாதல் என்பது அறிந்து தெளியப்படும். (5) பதியினது அருட்குணங்கள்-விளக்கம் இங்கு இறைவனது அருட்குணங்களின் இன்றியமை யாத இயல்புகளை விளக்குவோம். இந்த அருட்குணங்கள் தன்வயம், தூயஉடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசமின்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பிலின்பம் என்ற எட்டு ஆகும். இவை எண் குணங்கள் என்று வழங்கப்பெறும். தன்வயம் உடைமை. இது வடமொழியில் சுதந்திரத்து வம் (சுவதந்திரதை) என்று வழங்கப்பெறும். எவ்விடத்தும் தலைவராய் இருப்போர் அவர் பிறர் வழிபட்டு நடத்தற்குரிய ग्लg. அப். தேவா. 5.89:8 109. மேலது 4.18:8 110. சுந்தரர் தேவா. 7.40:3