பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தத்துவங்கள்-2 (பசு) "பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களில் பதி யாகிய கடவுளைப்பற்றி முன்னர் விரிவாக விளக்கப் பெற்றது. இங்கு பசுபற்றிய கொள்கைகளைக் காண்போம். பசு உயிரைச் சித்தாந்தம் பசு என்று பேசும். உயிரை நாம் கண்ணால் காணமுடியாவிடினும் கருத்துக்குப் புலனாவ தாக ஏற்றுக் கொள்ளுகின்றோம். உயிர் என்பது அறிவுடை யது; ஆயினும் இறைவனது உயிர் போன்ற பேரறிவுடைய தாகாது; அது சிற்றறிவுடையதாய் உள்ள பொருள் -இதுவே சைவ சித்தாந்தம் கூறும் உயிரைப் பற்றிச் சுருக்கமான கொள்கையாகும். . . பிறசமயிகளும் அறிவைத்தான் உயிர் என்கின்றனர். ஆயினும் அவர்கள் அறிவுபற்றி பலவிதமாகக் கூறுகின்றனர். அவர்கள் கூறும் கருத்துகளைச் சைவ சித்தாந்தம் பொறுமை யுடன் கேட்டு, உரிய மதிப்பு தந்து, நன்கு சிந்தித்துப்பார்த்து ஆராய்ந்து பொருந்தாதவற்றைக் காரணம் காட்டி விலக்கு கின்றது. பிறகு இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட சிறந்த புதிய பொருத்தமான கொள்கையின் அறிவு நெறிக்கு இணங்க ஆராய்ந்து காட்டி நிறுவுகின்றது. இதுவே மெய்கண்ட நூல் கள் நுவலும் சைவசித்தாந்தம் என்னும் தனிப் பெருங் கொள்கையாகும். இத்தத்துவம் “ஆன்ம இலக்கணம் பற்றிப்