பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -2 (பசு) #23 பலர் கூறும் கருத்துகளை எங்ங்னம் ஆய்ந்து விலக்குகின்றது என்பதைக் காண்டோம். () உயிர்பற்றிப் பிறர் கூறும் கருத்துகள் -விலக்குதல் இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம். (அ) உயிர் சூனியம் ஆகாமை: பெளத்தர்கள் "அறிவு என்பது ஒன்று இருப்பது போலத் தோன்றினாலும் அஃது எங்கே உள்ளது என்று துருவிக் காணும்பொழுது இல்லாத தாகவே ஆய்விடுகின்றது; ஆகையால் சூனியமாக உள்ள ஒன்றே உயிரெனப்படுகின்றது என்கின்றனர். சூனியம்’ என்பதற்கு அவர்கள் கொண்டுள்ள பொருள் இல்லது மன்றி உள்ளது மன்றி இருப்பது என்பதாகும். உயிர் சூன்யம் ஆயின் உயிர் சூனியமே என்று உணர்வதும், உணர்ந்து சூனியம் தான் உயிர் எனப்படுகின்றது. என்று பிறர்க்கு உணர்த்துவதும் ஆகிய அந்த அறிவு உள்ளதோ? இல்லதோ? இல்லை எனின் தான் உணர்ந்தும், தான் உணர்ந்ததைப் பிறர்க்கு உணர்த்தியும் நிற்கும் அறிவை 'இல்லை என்பது, தன்னைப் பெற்ற தாயை ஒருவன் என் தாய் மலடி என்பது போல, மாறுகோளுரையாய் முடியும். ஆதலின் அவ்வறிவு உள்ளதேயாம். அதனால் அந்த அறிவுதான் உயிர் என்று இனிது நிறுவப்படும். இனி உண்மைக்கு மறுதலை இன்மை என்றும், இன் மைக்கு மறுதலை உண்மையென்றும் கூறப்படுகின்றனவன்றி இவ்விரண்டுக்கும் வேறாக மூன்றாவது ஒன்றைச் சூனியம்’ என்பதற்குப் பொருள் எனக் கூறுதல், அங்ங்ணம் கூறுவார் உள்ளத்திற்கு உடன்பாடாகுமன்றிப் பிறர் ஒருவருக்கும் உடன்