பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -2 (பசு) 127 (ஈ) நுண்ணுடம்பு உயிராகாமை மனம் முதலிய உட்கருவிகளையுடைய நுண்ணுடம்பே (அக உடம்பே) ஐம் பொறிகள் வாயிலாகப் புலன்களை அறிவதால் அதுவே ஆன்மாவாகும் என்பர் சூக்கும தேகான்மவாதிகள். நுண்ணுடம்பு கனவு நிலையில் செயற்பட்டு நிற்பது என்பது அனைவர்க்கும் உடன்பாடு. ஆனால் நுண்ணுடம்பே உயிர்' என்பதை மெய்கண்டார் மறுக்கின்றார். அவர் கூறுவது: "நுண்ணுடம்பே உயிராயின் நாம் காண்கின்ற கனவுகள் யாவும் விழித்த பின் முன்பு கண்டது போலவே தெளிவாக அறிந்து சொல்லுதல் வேண்டும். ஏனெனில், கனவு கண்டதும், விழித்தவின் பருவுடம்பு வழியாகப் பிறவற்றை அறிவதும் ஒரு பொருளேயாதலின் அவ்விடத்து மாறுதல் உண்டாதற்குக் காரணம் இல்லை. அஃதாவது இல்லத்தில் உணவு உண்ட ஒருவன் உடனே வெளியே வருவானாயின், உண்ட உணவின் தன்மைகள் பலவற்றையும் அவன் தெளிவாக அறிந்து சொல்ல முடிகின்றது. அது போலவே முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மறுநாள் மறதியின்றித் தெளிவாகச் சொல்ல முடிகின்றது. இங்ங்னமே இரவில் கண்ட கனவை மறுநாள் காலையில் மறவாது நினைத்திருந்து சொல்லுதல் அநுபவத்தில் இல்லை. கனவு கண்டு கொண்டே இருப்பவன் உடனே கண்விழித்துக் கொண்டாலும், அந்தக் கனவு அவனுக்குத் தெளிவாக விளங்காமல் போகின்றது. கனவு கண்டதையே அடியோடு மறந்தும் விடுகின்றான். இதற்குக் காரணம் புறவுடம் பில் நின்று நனவுநிலையில் நிகழ்வனவற்றை அறிவதும், அக டம்பில் நின்று கனவுநிலையில் நிகழ்வனவற்றை அறிவதும் ஆகிய பொருள் இவ்விரண்டு உடம்பிற்கும் வேறாய் இருப்பதேயாகும். அஃது அங்ங்ணம் சூக்கும உடம்பிற்கு வேறாய் இருப்பதால் அதனை விட்டு நனவுநிலையில் புறவுடம்பில் வந்த காலத்தில் முன் வேறு உடம்பில் நின்று