பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#30 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் அவர்கள் "அறிவு வடிவாய் உள்ளது பரப்பிரம்மமே. அது வானத்திலுள்ள ஒரு சந்திரன் பூமியிலுள்ள பல நீர் நிலைகளில் பல சந்திரர்களாய்ப் பிரதிபலிப்பதைப்போல, மாயையின் காரணமாகிய பல உடம்புகளில் பல சீவன்மாக்களாகப் பிரதிபிம்பிக்கின்றது. ஆகவே, உயிர் பரப்பிரம்மமேயன்றி வேறில்லை" எனக் கூறுவர். இவர்கள் கூற்றின் பொருந்தாமை யையும் மெய்கண்டார் தெளிவாக விளக்குவார். அவர் கூறுவது () "பரப்பிரம்மம் அறிவே வடிவானது என்பதை ஒப்புக் கொண்டால், அதற்கு அறியாமையும் உண்டு என்று கூறுதல் மாறுகோள் உரையாகும். ஏனெனில், ‘சூரியன் ஒளியே வடிவானவன் என்று சொல்லிவிட்டு, அதே சமயத்தில் அவனிடத்தில் இருளும் உண்டு என்பது எப்படிப் பொருந்தும்? இது போலத்தான், அறிவே வடிவமான பரப்பிரம்மம் அறியாமையையும் உடையதாகும்’ என்று கூறுதலும் பொருந்தாது. உலகில் உடம்புதோறும் காணப்படு கின்ற உயிர்கள் பரு உடம்பாயும் நுண்உடம்பாயும் நிற்கும் கருவிகள் முழுவதும் செயலற்றிருக்கும் பேருறக்கத்தில் ஒன்றும் அறியாது பேர் அறியாமையில் அழுந்தியும், அக்கருவிகள் எந்த அளவிற்குச் செயற்படுகின்றனவோ அந்த அளவிற்கு அறிவைப் பெற்றும் நிற்கின்றன. உயிர்களை ஓர் அறிவுயிர், ஈரறிவுயிர் முதலாக ஆரறிவுயிர் வரையிலும் பகுத்துக் கூறுதல் அவற்றின் உடம்பு பற்றியேயாகும். ஆகவே, உயிர் இயற்கையில் அறியாமையை உடையதாய், பலவகை உடம்புகள் அவ்வறியாமையைச் சிறிது சிறிது நீக்கி அறிவை உண்டாக்கிய பின்னரே அறியும் தன்மையை உடையனவாதல் தெளிவு. ஆகவே, பரப்பிரம்மமே இவ்வாறு இயற்கையில் அறியாமையை உடையதாய் நின்று, பின் கருவிகள் வந்து அறிவைத் தர, அதனைப் பெறும் என்று கூறின் அது சூரியன் ஒளியைப் பெற்று விளங்குதல், உலகில்