பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்-2 (பசு), |3} ஏற்றப்படும் சிறிய விளக்குகளினாலேயாம்' என்று கூறுவதனோடொக்கும். சந்திரன் சூரியன் பூமியிலுள்ள நீர்நிலைகளில் பிரதிபலிக்குமாயின், அவ்விடத்திலும் அவை ஒளியுடையதாய் இருளை ஒட்டுவதல்லது இருளில் மூழ்குவதில்லை. அது போல, பரம்பிரம்மமே மாயையில் பிரதிபலிக்குமாயின், அவ்விடத்திலும் அது மாயையை ஒழிக்குமேயன்றி அதனால் மயங்கி விடாது, ஆகவே, மாயையில் அகப்பட்டு மயங்கி நிற்கின்ற உயிரை அறிவே சொரூபமான பரப்பிரம்மத்தின் பிரதிபிம்பம்’ எனக் கூறுதல் அறிவுடைமை ஆகாது. அஃது அறியாமை நிறைந்த கூற்றாகும்.” (ii) மேலும, இரவயோ மதியோ நீரில் பிரதிபலித்து நிற்குமாயின், அவ்விடங்களிலும் அது பரப்பிரம்மமாய் நிற்குமேயன்றி, சீவான்மாக்களாய் நில்லாது. ஆகவே, சீவான் மாக்கள், பரமான்வாகிய பரப்பிரம்மத்தின் பிரதிபிம்பமாகக் கூறுதல் எவ்விதம் பொருந்தும்?” . - (i) இன்னும், 'உடம்பு தோறும் காணப்படுகின்ற சீவான் மாக்கள், அவ்வுடற் கருவிகள் செயற்படும் பொழுது அறிவைப் பெறுகின்றன. அப்பொழுது பிற பொருள்களை அவ்வாறு அறிவனவன்றித் தன் சொரூபத்தைத் தாம் அறிவதில்லை. தம் சொரூபத்தை ஓர் ஆசிரியர் வந்து அறிவிக்கவே அறிகின் றன. தம் சொரூபத்தை அறியாது பிறபொருள்களை அறியும் பொழுதும் எல்லாப் பொருள்களையும் ஒருங்கே அறிவ தில்லை. ஒவ்வொன்றாகவே அறிகின்றன. அஃதாவது ஒரு பொருளை ஒரு கணத்திலும், மற்றொரு பொருளை அடுத்த கணத்திலுமாக அறிகின்றன. இவ்வாறு ஒவ்வொன்றாக அறியும் பொழுதும் இடைவிடாது அறிதலின்றி விட்டுவிட்டே அறியும். அப்பொழுது நினைப்பையும் மறைப்பையும் மாறி மாறிப்