பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 2 (பசு) 133 இவ்வாறு உயிர் பற்றிய பல்லோர் கூற்றையும் அன்று, அன்று என மறுத்து உயிர்பற்றிய தம் கொள்கையைக் கூறுகின்றார். (2) உயிர்பற்றிய மெய்கண்டாரது கொள்கைகள்: ஒரு பொருளை அஃது உண்டோ? இல்லையோ? என்று ஆராய்வதற்கு முன்னர் அதன் இயல்பு இன்னது என்பதை ஒரு சிறிதேனும் உணர்தல் வேண்டும். அறியும் தன்மையுடையது உயிர் என்பது முன்பு பல இடங்களிலும் விளக்கப்பெற்றுள்ளது. இது பொதுவாக யாவராலும் கொள்ளப் படுவது, இனி "உயிர் அறிவித்தால் அறியக் கூடியது அறியு மிடத்து ஒவ்வொன்றாக அறிவது, அறிவதையும் விட்டு விட்டே அறிவது; அங்ங்னம் அறியுங்கால் அறியப்பட்ட பொருளில் அழுந்தி அதுவேயாய் நின்று அறிவது ஆகிய இயல்பினையுடைய அறிவுப் பொருளே உயிர் அல்லது ஆன்மா' என்பதே மெய்கண்டார் கூறுவது. அன்றன் றெனநின் றனைத்தும் விட் டஞ்செழுத்தாய் நின்றொன் றுளததுவேநீ; யனைத்தும் - நின்றின்று தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீயல்லை தற்பரமும் அல்லை தனி. - (தர்ப்பணம்-கண்ணாடி) அறிந்தும் அறிவதே பாயும் அறியாது. அறிந்ததையும் விட்டங் கடங்கி-அறிந்தது எது?அறிவும் அன்றாகும்; மெய்கண்டான் ஒன்றின் அது.அது தான்என்னும் அகம்.' என்ற வெண்பாக்களால் இது தெளிவாகும். 7. சிஞர்.போ - சூத், 3. அதிகரணம் 6