பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 34 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இவற்றால் உயிர் என்பது தானே அறிந்தும் அறிவித்தும் நிற்பதாகிய பதியும் அன்று அறிவித்தாலும் அறிய மாட்டாத பாசமும் அன்று அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒர் இடைப்பட்ட பொருள் என்பது மேலும் தெளிவாகும். அறிவே வடிவாகிய பதிப்பொருள் சித்து என்று சொல்லப்படுவதை யும், அறிவே இல்லாத சடப் பொருள்களாகிய பாசங்கள் அசித்து' என்று வழங்கப் பெறுவதையும் நாம் அறிவோம். ஆதலால் அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாக பசு சிதசித்து என்று மொழியப்படும். சித்தாகிய பதி ஒரு பெற்றியதாய் இருத்தல் பற்றி சத்து’ என்றும், அசித்தாகிய பாசங்கள் நிலை மாற்றங்கள் அடைதல் பற்றி அசத்து' என்றும் சொல்லப் பெறுவதால், இடைப்பட்ட பொருளாகிய பசு 'சதசத்து என்றும் சொல்லப்படும்; இவற்றால் பதி, சித்து பாசம், அசித்து பசு சிதசித்து என்பதும் தெளியப்படும். மேலும் பதி, சத்து பாசம், அசத்து; பசு-சதசத்து என்பதும் பெறப்படும். தாயுமான அடிகளின், அறியாமை சாரின் அதுவாய், அறிவாம் நெறியான போததுவாய் நிற்கும்-குறியால் சதசத் தருள்.உணர்த்தத் தான்உணரா நின்ற விதமுற் றறிவெனும்பேர் மெய்!" என்ற திருப்பாடலும் இக்கருத்திற்கு அரணாக அமைந்து விளங்குவதைக் கண்டு தெளியலாம். ஈண்டு இரண்டு மாறுபட்ட தன்மைகள் ஒரு பொருளின் கண் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் உண்மையில் அங்ங்ணம் அன்று. சிதசித்து' என்பதற்கு சித்துத்தன்மை அசித்துத்தன்மை என்ற இரு தன்மையுடையது என்பது பொருளன்று இரண்டிற்கும் இடைப்பட்ட மற்றொரு தன்மை 8. தா.பா.உடல் பொய்யுறவு 22