பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 2. (பசு) 137 கூறே மற்றொன்றன் கூறு என்று கூறுதல் கூடுமோ? தேமாவின் கனி இனிப்பது புளிமாவின் கனி புளிப்பது; இரண்டிலும் ஒன்றன் கூறு மற்றொன்றன் கூறாதல் எவ்வாறு? இங்ங்னமே, எட்டி மரமும் பலாமரமும் மரம் என்னும் அளவில் ஓர் இனமாயினும், பலாவின் கனி இனிப்புடையதாயிருக்க, எட்டியின் கனி கசப்புடையதாய் நஞ்சாகி இருக்கின்றதன்றோ? இந்த இரண்டிலும் ஒன்றன் கூறு பிறிதொன்றன் கூறாகாது என்பது வெளிப்படை. இவ்வாறெல்லாம் நுணுகி நோக்கின், 'இனம் என்பதும், சாயை அல்லது கூறு' என்பதும் வெவ் வேறு கருத்துகளையுடையவை என்பது தெளிவாகும். இக் காரணத்தால் பதிக்குப் பசு தன் சாயை அல்லது பிரதிபிம்பம் அல்லது கூறுதான் பசு என்பவரது கொள்கையை ஒப்புக் கொள்ளுதல் இயலாது. இக்கூறியவற்றால் ஒருவாறு தெளிவு ஏற்பட்டிருக்கலாம். பதியின் அறிவு மேற்கூறிய பெருமையை எல்லாம் உடைமை யால், அது சூக்குமசித்தாயும் மாற்றம் ஏய்தாததாயும் உள்ளது. ஆதலால் அதனைப் பாசம் பற்றுதல் இல்லை. பசு அவ்வா றின்றி மேற்கூறிய சிறுமைகளையெல்லாம் உடைமையால் அது துலசித்தாயும் தான் அடுத்த பொருளின் தன்மையை எய்தியிருப்பதாய் இருத்தலால் அதனைப் பாசம் பற்றுவதா கின்றது. ஆகையால் பதி அநாதி முத்தசித்துரு (இயல் பாகவே பாசங்கள் நீங்கிய அறிவுடையது) என்பதும், பசு அநாதி பெத்த சித்துரு (இயல்பாகவே பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் அறிவு உடையது என்பது தெளிவாகின்றதல்லவா?. 'பசு என்பதற்கே பாசத்தால் கட்டுண்டு கிடப்பது என்பது தான் பொருள் என்பது முன்னரும் குறிப்பிடப்பெற்றுள்ளது.